ETV Bharat / state

"கறுப்புப்பணம் தான் நாட்டை ஆட்சி செய்து வருகிறது" - தா. பாண்டியன்!

author img

By

Published : Nov 14, 2019, 11:18 PM IST

கோயம்புத்தூர்: நேரு பிறந்த நாளை முன்னிட்டு இந்தியக் கலாசார நட்புறவுக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தா .பாண்டியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தா .பாண்டியன்

கோயம்புத்தூரில் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியக் கலாசார நட்புறவுக் கழகத்தின் சார்பாகக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தா. பாண்டியன் கூறுகையில், "நேருவின் குடும்பத்தை அழிப்பதே பிரதமர் மோடி வேலையாக வைத்துள்ளார். தற்போது, நாட்டை கறுப்புப் பணம் தான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. நேரு காட்டிய வழியைப் பின்பற்றாவிட்டால், இந்தியா அடி மட்டத்துக்குத் தான் செல்ல நேரிடும். என்.ஐ.டி, ஐ.ஐ.டி கல்லூரிகளைப் பொறுத்தவரை சாதி பாகுபாடு அதிகமாக உள்ளது. இதை, இந்த அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை' என்றும் குற்றம் சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் தா. பாண்டியன்

இதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் வெற்றிடம் குறித்து உங்கள் கருத்து எனச் செய்தியாளர் கேட்ட போது, 'ரஜினியின் கருத்துக்குப் பதில் சொல்லும் அளவிற்கு, அவர் பெரிய அரசியல் வாதியல்ல' எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: ‘ரஜினியின் கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை’ - கமல் ஹாசன்

Intro:இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் த.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு.Body:நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் நேருவின் குடும்பத்தை அழிப்பதே மோடி வேலையாக வைத்துள்ளதாகவும் கருப்பு பணமே நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறது என்றும் கூறினார். நேரு காட்டிய வழியை பின்பற்றாவிடால் இந்தியா அடி மட்டத்துக்கு செல்லும் என்றும் அதிக பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களை தன் சொந்த வேலைக்கு பயன்படுத்தி கொள்வதாகவும் தெரிவித்தார்.

என்.ஐ.டி, ஐ.ஐ.டி பொறுத்தவரை ஜாதி பாகுபாடு உள்ளது என்றும் அதை இந்த அரசால் கட்டுபடுத்த முடியவில்லையென்றும் குற்றம் சாட்டினார். மேலும் இங்கு இட ஒதுக்கீடு சரிவர பின்பற்றபடுவதில்லை என்றும் கூறினார். ரஜினியின் கருத்துக்கு பதில் சொல்லும் அளவிற்கு அவர் பெரிய அரசியல் வாதியல்ல என்றும் கூறினார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.