ETV Bharat / state

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழித்த என்ஐஏ

author img

By

Published : Feb 6, 2023, 8:14 PM IST

உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கார் வெடித்த சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை என்ஐஏ அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் அழித்தனர்.

NIA destroy explosives seized in Coimbatore car blast incident
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை அழித்த என்ஐஏ

கோயம்புத்தூர்: உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலையில் கார் ஒன்று வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார். இதுதொடர்பாக அவரது கூட்டாளிகள், முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணை, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் இறந்த ஜமேஷா முபினின் மனைவி நஸ்ரத், கோவை ஜே.எம்4 கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நஸ்ரத், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு வசதியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சைகை மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கிடையே கார் வெடிப்பு தாக்குல் சம்பவத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை சுல்தான்பேட்டை அருகே வாரப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் பாதுகாப்பாக அழித்தனர்.

இதையும் படிங்க: பேனா சின்னம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெண் சுற்றுச்சூழல் ஆர்வலருக்கு பாலியல் தொந்தரவு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.