ETV Bharat / state

தேசிய அளவிலான யோகா போட்டி: 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

author img

By

Published : Oct 11, 2019, 7:12 PM IST

கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

யோகா

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் யோகா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், யோகா கலையை ஊக்குவிக்கவும் வாமேதேவா யோகா மையம் சார்பில் தேசிய அளவிலான யோகாசன போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த யோகாசன போட்டிகளில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. சீனியர், ஜூனியர், சப்-ஜூனியர் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த யோகா போட்டிகளில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அதிகமானோர் பங்கேற்றனர்.

தேசிய அளவிலான யோகா போட்டி

இதில் மாணவ - மாணவியர் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்கள் செய்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இன்று முதல்நாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நாளைய போட்டிகள் முடிவடைந்த பின்னர் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இதையும் படிக்கலாமே: பெண் முதுகின் மீது ஏறி... அசரவைக்கும் பிரணிதாவின் ஆக்ரோ யோகா!

Intro:yogaBody:yogaConclusion:பொள்ளாச்சியில் தேசிய அளவிலான யோகா போட்டி தொடங்கியது 1000 கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

பொள்ளாச்சி : அக் 11

பொள்ளாச்சியில் யோகாவை பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் யோகா பயிற்சி செய்வதன் மூலம் உடல் மனம் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் உயிர் வாழ வழிவக்கும் மகத்துவம் வாய்ந்த யோகா கலையை ஊக்குவிக்கவும் பள்ளி மாணவ மாணவிகள் இளைஞர்கள் யோகாசன திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் வாமேதேவா யோகா மையம் சார்பில் தேசிய அளவிலான யோகாசன போட்டி இன்று தொடங்கியது முதல்நாளான இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான போட்டி ஆண் பெண் இருபாலருக்கு தனித்தனியாக நடைபெற்றது இதில் கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் மட்டுமல்லாது கேரளா ஆநதிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இதில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஜீனியர் சப்ஜீனியர் சீனியர் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மாணவ மாணவிகள் வளைந்து நெழிந்து பல்வேறு ஆசானங்களை செய்து காட்டி பார்வையாளர்களை அசத்தினர் தொடர்ந்து நாளை கல்லூரி மாணவ மாணவிகள் தனித்தனியாக குழுவாக சேர்ந்து ஆசனங்கள் செய்யும் போட்டி நடைபெற்று வருகின்றன நாளை நடைபெறும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுதல்களும் வழங்கப்படுகின்றன
பேட்டி-ராஜன், யோகா பயிற்சியாளர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.