ETV Bharat / state

கோவையில் மேலும் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்: பொள்ளாச்சி போலீசாருக்கு எச்சரிக்கை கடிதம்

author img

By

Published : Sep 29, 2022, 5:44 PM IST

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மேற்கு காவல் நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபர் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது

பொள்ளாச்சியில்  16 இடங்களில் குண்டு வீசப்படும் என மர்ம நபர்கள் கடிதம்
பொள்ளாச்சியில் 16 இடங்களில் குண்டு வீசப்படும் என மர்ம நபர்கள் கடிதம்

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைக்க சிலர் முயற்சித்தனர். அதோடு சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சியில்  16 இடங்களில் குண்டு வீசப்படும் என மர்ம நபர்கள் கடிதம்
பொள்ளாச்சியில் 16 இடங்களில் குண்டு வீசப்படும் என மர்ம நபர்கள் கடிதம்

அவர்கள் மேற்கு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் அல்லது கையெறி குண்டு வீசப்படும்.

காவல்துறை எங்களுக்கு எதிரி அல்ல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு, SDPI, PFI எனர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தால் பொள்ளாச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தை அனுப்பிய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு பேருந்தில் ஓசியில் போக மாட்டேன் பாட்டியின் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.