ETV Bharat / state

உலக நன்மைக்காக கோயம்புத்தூரில் அரங்கேறிய நூதன திருமணம்!

author img

By

Published : Dec 30, 2020, 8:56 PM IST

கோயம்புத்தூர்: உலக நன்மைக்காக 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசமரத்திற்கும், வேப்பமரத்திற்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்து கிராம மக்கள் வேண்டுதல் நடத்தினர்.
கோயம்புத்தூரில் அரங்கேறிய நூதன திருமணம்!
கோயம்புத்தூரில் அரங்கேறிய நூதன திருமணம்!

சிவசக்தி

அரச மரமும் வேப்ப மரமும் இணைவது சிவசக்தியின் வெளிப்பாடு என ஆன்மிக பெரியோர் கூறுவர். இவற்றை யாரும் ஒரே இடத்தில் திட்டமிட்டு விதைப்பதில்லை, ஆனாலும் இவை பெரும்பாலும் அருகருகே வளரும். இந்த மரங்களின் அடியில் பிள்ளையார், முருகனை பிரதிஷ்டை செய்து வழிபடுவதற்கு இம்மரங்கள் சிவசக்தியின் வெளிப்பாடு என்பதே காரணம்.

கோயம்புத்தூரில் அரங்கேறிய நூதன திருமணம்

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டனர். அதிலும் இந்துக்கள் மரபில் வேம்பு, ஆல், அரசு ஆகிய மரங்களுக்கு பெரும் மதிப்பு உண்டு. இதன் தொடர்ச்சியாகவே, உலக நன்மைக்காக கோயம்புத்தூரில் அரசமரத்திற்கும், வேப்பமரத்திற்கும் இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர், அப்பகுதியினர்.

கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான கருப்பராயன் கோயில் உள்ளது. இங்கு தல விருட்சமாக 100 ஆண்டுகளுக்கு மேலான அரச மரமும், வேப்ப மரமும் உள்ளன.

உலக நன்மை

உலக நன்மை வேண்டி இக்கோயிலில் உள்ள வேப்பமரத்தை பெண் கடவுளாகவும், அரசமரத்தை ஆண் கடவுளாகவும் பாவித்து இரண்டிற்கும் திருமணம் செய்து வைப்பது என கிராம மக்கள் முடிவெடுத்தனர். இத்திருமணத்திற்கு கிராம மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

மணமக்கள் அலங்காரம்

அரசமரத்திற்கு பட்டு வேஷ்டி, பட்டு துண்டும், வேப்பமரத்திற்கு பட்டுப் புடவையும் உடுத்தி மணமக்கள் போல அலங்கரித்து மலர் மாலையும் அப்பகுதியினர் அணிவித்தனர்.

திருமணம்

பூசாரிகள் யாக குண்டம் வளர்த்தி வேத மந்திரங்கள் ஓத திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் மூன்று தம்பதிகளை வைத்து கன்னிகா தானம் செய்தனர். தொடர்ந்து தங்கத்தால் ஆன தாலியினை மஞ்சல் கயிற்றில் கோர்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று, 3 பெண்கள் இணைந்து இரண்டு மரங்களை மஞ்சள் சுற்றி கட்டி மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர்.

கோயம்புத்தூரில் அரங்கேறிய நூதன திருமணம்!

இந்து முறைப்படி அனைத்து திருமண சடங்குகளுடன் நடைபெற்ற இந்த புதுமையான திருமணத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கினர். மேலும், அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:படுத்தபடுக்கையான பெண்ணை பெருங்காதல் கொண்டு கரம்பிடித்த மாப்பிள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.