ETV Bharat / state

வேலுமணியுடன் இருந்தால் பிரச்சனை இல்லை; எதிரணியில் இருந்தால் காணாமல் போவாய்: வானதிக்கு வார்னிங் கொடுத்த சி.பி.ஆர்!

author img

By

Published : Jul 10, 2023, 9:10 PM IST

வேலுமணியுடன் பயணிக்கும் வரை பிரச்னை இல்லை, எதிரணியில் இருந்தால் நீ காணாமல் போய்விடுவாய் என வானதி சீனிவாசனை எச்சரிக்கும் விதமாக ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

CP Radhakrishnan
சி.பி.ராதாகிருஷ்ணன்

கோயம்புத்தூர்: கோவை சிட்டிசன் பார்ம் அமைப்பு சார்பில், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை தொழில் அமைப்பினர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். பின்னர், "இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் மூலம் மாவட்டம் மற்றும் மாநில பொருளாத்தராத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் வானதி போன்ற தலைவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதால், சாதனைகளை நிறைவேற்றுவதால் தேர்தல் வெற்றி வந்துவிடாது. எஸ்.பி.வேலுமணி அண்ணனை போல எல்லா வித்தைகளை கற்றிருக்க வேண்டும். நடைமுறையை அரசியலை செய்யாததால் நான் தொடரந்து 2 முறை வெற்றி பெற்று 3 முறை தோற்றேன்.

நான் பாஜக உறுப்பினர் பதவி ராஜினாமா செய்த போதும் அண்ணாமலை, வானதியை சந்தித்து பேசினேன். அப்போது அண்ணாமலையிடம் நான் கூறுவதை இன்றாவது கேளுங்கள் என கூறினேன். நீங்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என நான் நினைக்கிறேன். எனது தனிபட்ட கொள்கைகளை புகுத்தியதால் நான் தோல்வியடைய நேர்ந்தது.

அப்படி நீங்களும் தோற்க வேண்டும் என நான் நினைக்க மாட்டேன். நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், எதிர் முகாமினர் எந்த வியூகங்களை வகுக்கிறார்களோ, அதற்கு மாற்று வியூகங்களை வகுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் அதை நீங்கள் செய்ய வேண்டும் கூறினேன்.

கடந்த ஆங்கிலேயே ஆட்சிக்கு பின் 51 ஆண்டுகளாக கோவையில் இருந்து புறப்பட 2 ரயில்கள் தான் இருந்தது. 1998-ல் இருந்து 2004 நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தேன் அப்போது கொங்கு விரைவு ரயில், கோவை - மும்பை திலகர் விரைவு ரயில், மயிலாடுதுறை விரைவு ரயில், சென்னைக்கு பின் கேரளாவிற்கு கோவையில் இருந்து செல்லும் மின்சார ரயில் புதிய திட்டம் என கொண்டு வந்தோம். ஆனால் அடுத்த தேர்தலிலேயே தோல்வியடைந்தேன்.

பாடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... 'வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை, புத்திசாலி மனிதர் எல்லாம் வெற்றி பெற்றதில்லை' என, சந்திரபாபுவே காணாமல் போனால் நாமும் அதே போவோம், எனவே வானதி கண்ணுங்கருத்தா பார்த்து கொள்ள வேண்டும், வேலுமணியுடன் பயணிக்கும் வரை தான் உனக்கு பிரச்னை இல்லை, எதிரணியில் இருந்தால் நீ காணாமல் போய்விடுவாய்" என எச்சரிக்கை கொடுக்கும் விதமாக சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.

இதையும் படிங்க: "பாஜகவுக்கு தமிழ்நாடு ஒரு போதும் அடிபணியாது" - அமைச்சர் துரைமுருகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.