ETV Bharat / state

கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சி...2000 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் தலைமை ஆசிரியர்!!

author img

By

Published : Nov 24, 2022, 9:53 PM IST

கிராமிய கலைகள் மீது கொண்ட ஆர்வத்தால் கொங்கு மண்டலத்தில் அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 40 கிராமங்களை சார்ந்த சுமார் 2000 பேருக்கு கிராமிய கலைகளை இலவசமாக கற்றுக்கொடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோவை: கருமத்தம்பட்டியை சேர்ந்த கனகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம் எம்.நாதம்பாளையம் அரசு துவக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாரம்பரிய கலைகளில் அதிக ஆர்வம் கொண்ட அவர் கொங்கு மண்டலத்தின் பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்க 2012ஆம் ஆண்டு சங்கமம் கலைக் குழுவை ஏற்படுத்தி அதில் ஒயிலாட்டம், வள்ளி கும்மி , காவடி ஆட்டம் ஆகிய கிராமிய கலைகளை கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இலவசமாக கற்றுக்கொடுத்து வருகிறார்.

இதுவரை 40 கிராமங்களை சார்ந்த 2000க்கும் அதிகமானோருக்கு கற்றுக்கொடுத்து அரங்கேற்றம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "சங்கமம் கலைக் குழுவால் கொங்கு மண்டலத்தில் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் உயிர் பெற்று வருகிறது. நாட்டு புறக்கலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து 6 மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழுவை உருவாக்கி வருகிறோம்.

கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் 2000 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் தலைமை ஆசிரியர்
கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் 2000 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் தலைமை ஆசிரியர்

தமிழ்நாட்டில் 120 பாரம்பரிய கலைகள் உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதில் கொங்கு மண்டலத்தில் ஒயிலாட்டம், காவடி ஆட்டம், வள்ளி கும்மி, சலங்கை ஆட்டம் ஆகியவை முக்கியமானவை. ஒரு சில இடங்களில் மட்டுமே ஆடப்பட்டு வரும் நிலையில், இந்த கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் 2000 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் தலைமை ஆசிரியர்
கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் 2000 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் தலைமை ஆசிரியர்

கோவை மட்டுமல்ல அண்டை மாவட்டங்களிலும் இக்கலையை இலவசமாக கற்றுக்கொடுத்து வரும் நிலையில், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலைகளை வெளிநாட்டினரும் அறிந்து கொள்ளும் வகையில் மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் சென்று ஒயிலாட்டத்தையும் காவடியாட்டத்தையும் அரங்கேற்றம் செய்துள்ளதாகவும், சங்கமம் கலைக்குழு கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரங்கேகேற்றத்தை நடத்தியுள்ளது என தெரிவித்தார்.

இதுகுறித்து ஒயிலாட்டம் பயின்ற கல்லூரி மாணவர்கள் கூறுகையில் ஒயிலாட்டம் பழகும் போது பல அசைவுகளை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும் பல்வேறு அசைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதால் ஞாபக திறன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக கல்வியிலும் தங்களுக்கு ஞாபகத் திறன் அதிகமாகிறது, அதே சமயம் மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் வெற்றி பெறுவதுடன் நம்முடைய பாரம்பரிய கலைகளை கற்பது பெருமையாக உள்ளது என தெரிவித்தனர்.

கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் 2000 பேருக்கு இலவசமாக பயிற்சி அளிக்கும் தலைமை ஆசிரியர்

வீட்டிலேயே முடங்கி இருக்கும் தங்களுக்கு ஒயிலாட்ட பயிற்சிக்கு வரும்போது பல்வேறு அறிமுகங்கள் கிடைப்பதால் நட்பு வட்டம் அதிகமாகிறது. இக்கலைக்காக உடலை அசைத்து ஆடுவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுகிறது. அதே சமயம் பாரம்பரிய கலைகளை மீட்பதில் தங்களுக்கும் ஒரு பங்கு இருப்பதை நினைத்து பெருமைப்படுவதாக குடும்ப பெண்கள் தெரிவித்தனர்.

சமீபத்தில் சங்கமம் கலைக்குழு சார்பில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்துகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோவை: ரூ.6 கோடியில் நாட்டின் முதல் இன்ஜினியரிங் மியூசியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.