ETV Bharat / state

பெட்ரோல் விலையை உயர்த்தும் சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது - முன்னாள் எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Apr 8, 2022, 10:47 PM IST

சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் சூழ்நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணன்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்பி சிபி ராதாகிருஷ்ணன்

கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (ஏப்.08) பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் காந்தி பார்க் பகுதியில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்.பி., சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், “சொல்வதைச் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்து விட்டு சொல்லாததை எல்லாம் செய்பவர்கள்தான் திமுகவினர். சொத்தையே விற்று கட்டுவது போல் சொத்து வரியை உயர்த்தி உள்ளனர். அதிமுகவினர் மத்திய அரசிடமிருந்து தேவையானவற்றை பெறுகின்ற பொழுது அடிமை அரசு எனக் கூறிய இவர்கள் தற்போது அனைத்திற்கும் டெல்லியை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

கொலுசு பார்ட்டி: கையாளாகாத அரசு ஆட்சிப்பொறுப்பில் உள்ளது. காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் கணக்கு உள்ளதாகக் கூறி வந்தவர்கள் தான் திமுகவினர். திமுக பெற்றுள்ள கடைசி வெற்றி இந்த வெற்றிதான். திமுகவின் பெயரை கொலுசு பார்ட்டி என்றும்; அவர்களது உதயசூரியன் சின்னத்தை கொலுசு சின்னமாகவும் மாற்றி வைத்துக் கொள்ளலாம். திமுக அரசு மத்திய அரசுதான் சொத்து வரியை உயர்த்தியதற்கு காரணம் எனறு கூறினால், அதற்கான ஆவணங்களைக் காண்பியுங்கள்.

திமுகவினருக்கு பக்கவாத்தியங்கள் என்ற நம்பிக்கை தான் அதிகம் (என பாலகிருஷ்ணன், திருமாவளவன், வைகோ ஆகியவர்களை சுட்டிக்காட்டினார்). பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், 'தேர்தல் வாக்குறுதியில் சொல்லாமலேயே பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு தான். ஆனால் திமுக அரசு கூறியதை சரிவர செய்யவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி., சி.பி. ராதாகிருஷ்ணன்

வேதனையோடு பெட்ரோல் விலையை உயர்த்துகின்ற சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது. ரஷ்யாவிலிருந்து குருடாயில் இந்தியாவிற்கு வரும்போது பெட்ரோல் விலை குறையும். ஆனால், சூழலின் காரணத்தால் உயர்ந்து கொண்டே வருகின்ற விலையை, இனி குறைக்கும் வகையில் சூழலை உருவாக்குவோம்” என்றார்.

இதையும் படிங்க: 'ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள்': அமித் ஷா செயலுக்கு அதிருப்தி தெரிவித்த முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.