ETV Bharat / state

அதிமுக வெற்றி வாகை சூட வேண்டிய இடத்தில் கூட அதிமுகவுக்கு வாக்கு விழவில்லை - எஸ்.பி.வேலுமணியின் வருத்தம்

author img

By

Published : Feb 26, 2022, 5:15 PM IST

இந்த தேர்தலைப் பெருத்தவரை மக்கள் திமுகவிற்கு ஓட்டுப்போட வாய்ப்புகளே இல்லை, திமுகவிற்கு ஓட்டளிக்க ஏதாவது காரணம் வேண்டும். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் திமுக வாக்கு பெற்றுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வெற்றி வாகை சூடவேண்டிய இடத்தில் கூட அதிமுகவிற்கு வாக்கு விழவில்லை, ஆனால் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர்கள் வீட்டிற்கு வந்து அதிமுகவிற்கு வாக்களித்ததாகவே செல்கின்றனர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக வெற்றி வாகை சூட வேண்டிய இடத்தில் கூட அதிமுகவுக்கு வாக்கு விழவில்லை
அதிமுக வெற்றி வாகை சூட வேண்டிய இடத்தில் கூட அதிமுகவுக்கு வாக்கு விழவில்லை

கோயம்புத்தூர்: மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரின் முறைகேடுகள் மற்றும் அதிமுகவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும், 28 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்த திமுக அரசின் நடவடிக்கை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

திமுகவின் வெற்றி செயற்கையானது
திமுகவின் வெற்றி செயற்கையானது

அந்த கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக அரசு பழிவாங்கும் நோக்குடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளார்கள். இந்த தேர்தலைப் பெருத்தவரை மக்கள் திமுகவிற்கு ஓட்டுப்போட வாய்ப்புகளே இல்லை, திமுகவிற்கு ஓட்டளிக்க ஏதாவது காரணம் வேண்டும். ஆனால், எந்த காரணமும் இல்லாமல் திமுக வாக்கு பெற்றுள்ளது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதயதெய்வம் மாளிகையில்
இதயதெய்வம் மாளிகையில்

கடந்த 9 மாதகாலமாக தமிழ்நாட்டிற்கு ஒன்றும் செய்யாத திமுக முறைகேட்டின் மூலம் வெற்றி பெற்று இருக்கின்றது. இந்த தேர்தலில் இ.வி.பேட் பொருத்தாதது பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஜனநாயக ரீதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது எனவும், திமுகவின் வெற்றி செயற்கையானது என கூறினார்.

திமுக முறைகேட்டின் மூலம் வெற்றி பெற்று இருக்கின்றது எஸ் பி வேலுமணி
திமுக முறைகேட்டின் மூலம் வெற்றி பெற்று இருக்கின்றது எஸ் பி வேலுமணி

அதிமுக வெற்றி வாகை சூடவேண்டிய இடத்தில் கூட அதிமுகவிற்கு வாக்கு விழவில்லை எனவும், ஆனால் வாக்காளர்கள் அதிமுக வேட்பாளர்கள் வீட்டிற்கு வந்து அதிமுகவிற்கு வாக்களித்ததாகவே செல்கின்றனர் எனவும் தெரிவித்தார். மேலும், வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுகவினர் மீது பொய் வதுக்குப் பதிவு செய்து மிரட்டுகின்றனர்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் வி.வி.பேட் வைத்திருக்க வேண்டும். ஆனால் பொருத்தாமல் விட்டது திமுகவினருக்குச் சாதகமாக அமைந்துள்ளது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை எதிர்கொள்வோம் எனவும், அதிமுகவினரை வழக்குகளால் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார். வரும்
28 ஆம்தேதி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டு திமுகவின் முகத்திரையைக் கிழிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: புனித்ராஜ்குமார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.