ETV Bharat / state

சாலையின் தடுப்புகளை உடைத்த யானைக் கூட்டம்!

author img

By

Published : Dec 3, 2019, 12:24 PM IST

கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு யானைக் கூட்டம் சாலையைக் கடந்து சென்றது.

கோவை
Coimbatore to Mettupalayam road

கோவை - மேட்டுப்பாளையம் சாலையினை காட்டு யானைக் கூட்டம் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் கோவை - மேட்டுப்பாளையம் சாலையானது விரிவுபடுத்தப்பட்டு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இடிகரை வனப்பகுதியிலிருந்து சாலையை கடந்து பெரிய பண்ணாரி வனப்பகுதிக்குள் ஏழு யானைகள் கொண்ட கூட்டம் சாலையை கடந்து சென்றது.

யானைக் கூட்டம் சாலையை கடக்க இருக்கும் நிலையில் வனத்துறையினர் இன்று அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்திய வனத்துறையினர், யானைக் கூட்டம் சாலையைக் கடக்க உதவி செய்தனர்.

தடுப்புகளை உடைக்கும் யானை கூட்டம்.

யானைகள் சாலையை கடக்கும்போது சாலை நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு கடந்து சென்றன. யானைகள் கடந்துசென்ற பின் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிக்க: அழியும் நிலையில் உள்ள அரியவகை மகுடம் சூடிய பட்டாம்பூச்சி!

Intro:கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு யானை கூட்டம் சாலையை கடந்து சென்றது.

Body:கோவை மேட்டுப்பாளையம் சாலையினை காட்டு யானை கூட்டம் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் கோவை மேட்டுப்பாளையம் சாலையானது விரிவுபடுத்தப்பட்டது.அப்போது சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.இந்நிலையில் இடிகரை வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து பெரிய பண்ணாரி வனப்பகுதிக்குள் செல்வதற்காக யானை கூட்டம் வந்தது. 7 யானைகள் கொண்ட இந்த கூட்டம்
நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் இருந்து சாலையை கடந்து சென்றது. யானை கூட்டம் சாலையை கடக்க இருக்கும் நிலையில் வனத்துறையினர் இன்று அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.யானை கூட்டம் சாலையை கடப்பதற்காக இருபுறமும் போக்குவரத்தை நிறுத்திய வனத்துறையினர் , யானைகூட்டம் சாலையை கடக்க உதவி செய்தனர்.
யானை கூட்டம் சாலையை கடந்த பின் பட்டாசு வெடித்து யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டியடித்து வருகின்றனர். யானை கூட்டம் சாலையின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்த சம்பவத்தை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.