ETV Bharat / state

கோயம்புத்தூர் மக்களே பொங்கல் பரிசுல புகாரா?: போன் நம்பரை நோட் பண்ணிக்கோங்க!

author img

By

Published : Dec 30, 2022, 10:42 PM IST

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண்களை கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மக்களே பொங்கல் பரிசுல புகாரா?: தொலைபேசி எண் நோட் பண்ணிக்கோங்க!
கோயம்புத்தூர் மக்களே பொங்கல் பரிசுல புகாரா?: தொலைபேசி எண் நோட் பண்ணிக்கோங்க!

கோயம்புத்தூர்: பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியரே முழு பொறுப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிப்பதற்காக கோவை மாவட்டத்தில் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "2023ஆம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/-ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன்கள் 03.01.2023 முதல் 08.01.2023 வரை குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறையில் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படும்.

கோயம்புத்தூர் மக்களே பொங்கல் பரிசுல புகாரா?: தொலைபேசி எண் நோட் பண்ணிக்கோங்க!
கோயம்புத்தூர் மக்களே பொங்கல் பரிசுல புகாரா?: தொலைபேசி எண் நோட் பண்ணிக்கோங்க!

பொங்கல் பரிசு நியாயவிலைக்கடை விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) பயோமெட்ரிக் முறை மூலம் வழங்கப்படும். பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்ட விவரம் குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் எவரேனும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

  • மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்: 0422-2300569
  • மாவட்ட வழங்கல் அலுவலர்: 9445000245
  • தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் வடக்கு: 9445000246
  • தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் மேற்கு: 9445000250
  • தனி வட்டாட்சியர் கோயம்புத்தூர் தெற்கு: 9445000247
  • தனி வட்டாட்சியர் பொள்ளாச்சி: 9445000252
  • தனி வட்டாட்சியர் அன்னூர்: 9445796442
  • வட்ட வழங்கல் அலுவலர் மதுக்கரை: 9445000248
  • வட்ட வழங்கல் அலுவலர் ஆனைமலை: 9361646312
  • வட்ட வழங்கல் அலுவலர் பேரூர்: 9445000249
  • வட்ட வழங்கல் அலுவலர் கிணத்துக்கடவு: 9445796443
  • வட்ட வழங்கல் அலுவலர் மேட்டுப்பாளையம்: 9445796443
  • வட்ட வழங்கல் அலுவலர் சூலூர்: 9445000406
  • வட்ட வழங்கல் அலுவலர் வால்பாறை: 9445000253 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு சாலை வசதி அமையுங்கள்: உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.