ETV Bharat / state

செஸ் போட்டி - ஓவியங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சார் ஆட்சியர்...

author img

By

Published : Jul 22, 2022, 10:39 PM IST

Updated : Jul 22, 2022, 11:03 PM IST

சென்னையில் சர்வதேச செஸ் போட்டி நடைபெற உள்ள நிலையில், பொள்ளாச்சியில் ஓவியம் மூலம் சார் ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

wgq
wgq

செங்கல்பட்டு :் மாமல்லபுரத்தில் வரும் 28ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்கள் வருவதால் சென்னையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

செஸ் போட்டி

இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ். செஸ் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கராத்தே, கபடி, ஓட்டப்பந்தயம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தி அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

இதில் பொதுமக்களை மிகவும் கவரும் வகையில் சார் ஆட்சியர் அலுவலக சுவர் முழுவதும் செஸ் போட்டிகள் குறித்த வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது. இதனை அவ்வழியே பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

மேலும் ஓவியர் கணபதி சுப்ரமணியம் கைவணத்தில் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் செஸ் போட்டியின் அடையாளச் சின்னமான குதிரையை தத்ரூபமாக வரைந்து இருப்பது மக்களை கவர்ந்துள்ளது.

Last Updated : Jul 22, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.