ETV Bharat / state

கோயம்புத்தூர் தெற்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்: ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

author img

By

Published : Jun 30, 2021, 7:43 AM IST

கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் மாற்றப்பட்டு பொள்ளாச்சி நகர செயலாளராக இருக்கும் மருத்துவர் வரதராஜனுக்கு பொறுப்பை வழங்கி திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது.

dmk
dmk

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட பொள்ளாச்சி நகரச் செயலாளராக இருந்த தென்றல் செல்வராஜை சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக திமுக அறிவித்திருந்தது.

இதையடுத்துசட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோற்றது. இது திமுக மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

மருத்துவர் வரதராஜன்
மருத்துவர் வரதராஜன்

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் கட்சியில் சட்டப்பேரவைத் தேர்தலில் சரியாக பணியாற்றாத நபர்கள் மீது புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவுப்படி, கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப்பொறுப்பாளராக இருந்த தென்றல் செல்வராஜ் மாற்றப்பட்டு, பொள்ளாச்சி நகரச் செயலாளராக இருக்கும் மருத்துவர் வரதராஜன் பொறுப்பேற்றார்.

ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

இந்த அறிவிப்பையெடுத்து மருத்துவர் வரதராஜன் வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் திரண்டு முழக்கமிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருத்துவர் வரதராஜன் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பேரணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.