ETV Bharat / state

ஆழியார் அணையில் விழுந்த மாடு நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்பு!

author img

By

Published : Aug 10, 2020, 9:26 AM IST

buffalo death aliyar dam
buffalo death aliyar dam

கோவை : ஆழியார் அணையில் தவறி விழுந்த மாட்டின் உடல் மூன்று நாள்கள் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் உள்ள விவசாய நிலங்களில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. அங்குள்ள பொதுமக்கள் வளர்ப்பு மாடுகளை ஆழியாறு அணையின் கரையோரம் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணையில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த மாடுகளில் ஒன்று கால் தவறி அணையில் விழுந்தது.

இதையடுத்து, பொதுப்பணி அலுவலர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் மாட்டை கயிறு கட்டி இழுத்து வெளியே எடுத்து அங்குள்ள சம வெளிப்பகுதியில் புதைத்தனர்.

இதுகுறித்து, தீயணைப்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், “தொடர் மழை பெய்து வருவதால் இறந்த மாட்டை மீட்க முடியவில்லை. அதனால் வனத்துறையினர்,தீயணைப்புத் துறையினர் இணைந்து மாட்டை கயிறு கட்டி வெளியே எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.