ETV Bharat / state

"மு.க.ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசு கவிழ்ந்துவிடும்" - ஹெச்.ராஜா எச்சரிக்கை

author img

By

Published : Apr 17, 2023, 8:48 AM IST

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்கள் தான் எனவும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகம் பேசினால் அரசாங்கம் போய்விடும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Former BJP national president H Raja said that if Tamil Nadu Chief Minister Stalin talks too much the government will lost
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும் என முன்னாள் பாஜக தேசிய தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

ஹெச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: RSS பேரணிக்கு பின்னர் தேர்நிலை திடலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "PFI (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) உட்பட 8 அமைப்புகள் மத்திய அரசால் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கு மறுநாள் தமிழ்நாட்டில் திருமாவளவன், சீமான் ஆகியோர் மனித சங்கிலி நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. அது மனித சங்கலி அல்ல சங்கிலியின் ஒரு பிட்டு தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு இவர்கள் தடை விதித்து வந்தார்கள். சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுக்க அறிவுறுத்தியும், காசை கொண்டு பெரிய பெரிய வழக்கறிஞர்களைக் கொண்டு உச்ச நீதிமன்றம் சென்று தடை விதிக்க கூறினார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என கூறிவிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி என்னவென்றால், தமிழ்நாடு அரசு டிஜிபி யாருக்காக இருக்கின்றார்? தேசதுரோகிகளுக்கா? பயங்கரவாதிகளுக்காக? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்த மாநில அரசு தேச துரோகிகளின் அரசு என நான் பலமுறை கூறி வந்துள்ளேன், அது நேற்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறை மற்றும் அரசாங்கம் பிரிவினைவாத தீய சக்திகள் குறிப்பாக தனி தமிழ்நாடு கேட்கும் தமிழ் தேசிய இயக்கங்கள், திருமாவளவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பழனியில் காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அது ரவுடித்தனமான செயல். அது ரவுடிகளால் ரவுடிகளுக்காக ரவுடி நடத்துகின்ற கட்சி. அந்த தீய சக்திகளை செயல்பட அனுமதித்து விட்டு, தேசபக்த சக்திகளை நசுக்க பார்க்கின்றீர்கள், அது உங்களால் முடியாது. ஒவ்வொரு முறையும் தோற்று தான் போவீர்கள். இன்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. எதாவது பிரச்சனை வந்ததா? இனிமேலாவது திருந்துங்கள்.

காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. தீய சக்திகளின், பிரிவினைவாதிகளின், பயங்கரவாதிகளின் ஏவல் துறையாக காவல்துறை மாறிக் கொண்டிருக்கிறது என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது. நான் ஓராயிரம் முறை சொல்லுவேன், பிஎஃப்ஐ தேசத் துரோகிகள். அதனால் தான் அவர்கள் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஒரே நாளில் 19 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைவாதிகள், பயங்கரவாதிகள்" என்று கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசிய ஹெச்.ராஜா, "ராகுல் காந்தி ஒரு சாதியை இழிவாக பேசினார் என்பதால் அந்த சாதியை சேர்ந்த ஒரு நபர் வழக்கு தொடுத்தார். அதற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கொல்லி கட்டையால் தலையை சொறிந்து கொள்கிறார். பாஜகவிற்கு பெரிய பிரச்சார பீரங்கியே ராகுல் காந்தி தான். ராகுல் காந்தி பேசி விட்டு வந்தால் பத்தாயிரம் ஓட்டுக்கள் எங்களுக்கு அதிகமாக தான் விழும்.

பாஜக தலைவர் திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர்கள் 17 பேரும் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யட்டும், அண்ணாமலை சொல்லியது அனைத்தும் பொய், இந்த சொத்து எதுவும் எங்களுடையது இல்லை என தாக்கல் செய்யட்டும். சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளட்டும். தமிழக அரசுக்கு உள்ள கடனில் ஒரு 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி குறையும்.அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர், அவர் வெளியிட்டது பாஜக கட்சியின் கருத்து தான்” எனத் தெரிவித்தார்.

ஆளுநர் விவகாரம் குறித்த கேள்விக்கு, “தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்திற்கு போயிருக்கிறது. ஆளுநர் கையில் தகவலும், தரவுகளும் இருக்கின்ற காரணத்தால் பேசியிருக்கிறார். ஸ்டாலின் ரொம்ப பேசினால் அரசாங்கம் போய்விடும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை ஐந்து விரல்களுக்குள் எண்ணிவிடலாம்’ - ஓ.எஸ். மணியன் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.