ETV Bharat / state

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி!

author img

By

Published : Apr 7, 2023, 7:13 PM IST

கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: பேரூர் அடுத்து, மேற்குத் தொடர்ச்சிமலை அருகே உள்ள தொம்புளிபாளையம் கிராமம், குறிஞ்சி நகர் முத்து மாரியம்மன் கோயில் வீதியை சார்ந்த தனபால் (வயது 40). இவர், நேற்று இரவு போலுவாம்பட்டி வனச்சரகம் வெள்ளப்பதி பிரிவு, முள்ளங்காடு பகுதியில் நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது எதிரே காட்டு யானை வருவதை பார்த்த அவர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அதற்குள் அவரை நெருங்கிய யானை, அவரை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த தனபால் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இன்று காலை வனத்துறை ஊழியர்கள் அந்தப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தனபால் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆலாந்துறை காவல்துறைக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். உடனே காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று, தனபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வறட்சி வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஏராளமான யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வருவதால் மலை அடிவார கிராமங்களில் உள்ளவர்கள் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் அவசியம் இல்லாமல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அந்தப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜாதி சான்றுக்கு ரூ.300 லஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு ஓராண்டு ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.