ETV Bharat / state

8ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 10ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்... அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு

author img

By

Published : Aug 24, 2022, 11:02 PM IST

தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

8ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 10 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்... அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு
8ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 10 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்... அரசுத் தேர்வுத்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்விற்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், இவர்களுக்கான தேர்வுகள் அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '8ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதுவதற்கு அக்டோபர் 1ஆம் தேதி 12 வயது 6 மாதம் பூர்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்ட மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் செப்டம்பர் 12, 13 ஆகியத் தேதிகளில் தட்கலில் விண்ணப்பிக்கலாம்.

தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் போது, பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் அல்லது பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள் மதிப்பெண் சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், 11ஆம் தேதி ஆங்கிலம், 12ஆம் தேதி கணிதம், 13ஆம் தேதி அறிவியல், 14ஆம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடைபெறும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இனி பள்ளிகளில் பணிப்பதிவேடு, பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் பராமரிக்கத்தேவையில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.