ETV Bharat / state

நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி!

author img

By

Published : Aug 5, 2019, 6:56 PM IST

சென்னை: மோசடி புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை அலுவலர்களை கண்டித்து, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CASE

சென்னை, துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாத்திமா(55). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பகதூர் என்பவரிடம் 10 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பகதூர் பலநாட்களாக திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

WOMEN SUICIDE ATTEMPT  POLICE COMMISSIONER OFFICE  காவல்துறை ஆணையாளர் அலுவலகம்  பெண் தீக்குளிக்க முயற்சி
பெண் தீக்குளிக்க முயற்சி

இதுகுறித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஃபாத்திமா புகார் அளித்துள்ளார். ஆனால், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த ஃபாத்திமா, காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு திடீரென மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி ஃபாத்திமாவை காப்பாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய காவலர்கள்
Intro:Body:காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..

துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் பாத்திமா அதே பகுதியைச் சேர்ந்த பகதூர் 10 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த பாத்திமா காவல்துறை ஆணையாளர் அலுவலகம் முன்பு புகார் கொடுக்க வந்த இடத்தில் திடீரென மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக நீரை ஊற்றி பாத்திமாவை காப்பாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.