ETV Bharat / state

17 வயது சிறுமி கருக்கலைப்பு விவகாரம் - ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற ஆய்வாளர் சஸ்பெண்ட்

author img

By

Published : Jul 11, 2023, 1:49 PM IST

ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் வந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

12 லட்சம் லஞ்சம் பெற்ற பெண் ஆய்வாளர் மகிதா சஸ்பண்ட்
12 லட்சம் லஞ்சம் பெற்ற பெண் ஆய்வாளர் மகிதா சஸ்பண்ட்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சிலர் ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்குச் சென்று, ஊழியரை மிரட்டி, ஓசியில் ஜூஸ் கேட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதனை அடுத்து, தற்போது ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மகிதா கடந்த சில வாரங்களுக்கு முன் கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு, மருத்துவர் ஒருவர் கருகலைப்பு செய்ததாக அவருக்கு புகார் வந்துள்ளது.

இதையும் படிங்க: மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட 14,000 குழந்தைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது - NCPCR தகவல்

இந்தப் புகாரை உரிய முறையில் விசாரிக்காமல், மகிதா புகாரை வைத்துக்கொண்டு அரசு மருத்துவரிடம் சுமார் 12 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது. பின்னர் அரசு மருத்துவரிடம் இருந்து 12 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இதன் அடிப்படையில் இன்று (ஜூலை 11) ஆய்வாளர் மகிதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் புகார் தர வரும் நபர்களிடம் வழக்குப்பதிவு செய்யாமல், சமரசம் செய்து வைத்து, கணிசமான தொகை பெற்றுக்கொண்டு வழக்கை அப்படியே விடுகிறார் எனத் தெரிய வந்துள்ளது.

அதைபோல, சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் நிலைய பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி 17 வயது சிறுமி கருகலைப்பு விவகாரத்தில் மருத்துவரை மிரட்டி 12 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.

இதையும் படிங்க: Karur IT Raid: கரூரில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.