ETV Bharat / state

பொங்கலுக்குள் தயாராகுமா கிளாம்பாக்கம் பேருந்து முனையம்..? அமைச்சர் ஆய்வு..

author img

By

Published : Nov 30, 2022, 9:42 AM IST

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பொங்களுக்குள் பயன்பாட்டுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

பொங்கலுக்குள் தயாராகுமா கிளாம்பாக்கம் பேருந்து முனையம்..? அமைச்சர் ஆய்வு..
பொங்கலுக்குள் தயாராகுமா கிளாம்பாக்கம் பேருந்து முனையம்..? அமைச்சர் ஆய்வு..

சென்னை: வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள புதிய பேருந்து முனையத்தின் பணிகளை வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளிடம் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கிளாம்பாக்கம் சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பணிகளை விரைவாக முடிக்க முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு இங்கு நடைபெறும் பணிகள் குறித்து தனக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியதன் அடிப்படையில் இரண்டு முறை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பணிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

பணிகளை மிக விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென முதல்வர் விரும்புகிறார். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரிகள் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததை விட கூடுதலான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். இங்கு ஏறத்தாழ 225 பேருந்துகள் வந்து செல்லக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொங்கலுக்குள் தயாராகுமா கிளாம்பாக்கம் பேருந்து முனையம்..? அமைச்சர் ஆய்வு..

அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மின்சார ரயில் நிலையம் அமைப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் நடைபாதை கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளது.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என நம்புகிறோம். பணிகளை முடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை அதிகாரிகள் தங்களுக்கு கொடுத்துள்ளனர்.

மக்களோடு சேர்ந்து நானும் அதிகாரிகளை பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விடுங்கள் என கேட்கிறேன். என்னதான் பணிகளை வேகப்படுத்தினாலும் அதை தரமாக தான் கொண்டு வர வேண்டும்.

அதேபோல் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் மின்சார வாகனங்களுக்கு எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதியை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால் ஆதரிப்போம்- சீமான் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.