ETV Bharat / state

'கனிம வருவாய் ரூ.161 கோடி ஈட்டப்பட்டுள்ளது' - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

author img

By

Published : Jun 27, 2021, 7:53 AM IST

ஏப்ரல், மே மாதங்களில் கனிம வருவாய் ரூ. 161 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அரசு அலுவலர்கள் அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டித்தருமாறு செயல்பட, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

துரைமுருகன்
துரைமுருகன்

சென்னை: புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் பணி ஆய்வுக் கூட்டம் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று (ஜூன் 26) நடைபெற்றது.

இதில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் இல. நிர்மல்ராஜ், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண்மை இயக்குநர் சி.கதிரவன், தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆர்.பிருந்தாதேவி, பொதுமேலாளர்கள் ஆர்.பிரியா, ஹென்றி இராபர்ட், புவியியல் மற்றும் சுரங்கத்துறை கூடுதல் இயக்குநர் சுதர்சன், உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'இந்நிதியாண்டில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் ஏப்ரல், மே மாதம் வரையில் கனிம வருவாய் ரூ.161 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

அதிக வருவாய் ஈட்ட வேண்டும்

இனி வரும் மாதங்களில் அதிக வருவாயினை ஈட்டிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தர்மபுரி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில், தகுதிவாய்ந்த கிரானைட் குவாரிகளை உடனடியாக பொது ஏலத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
மண்டல பறக்கும் படையினர் முனைப்புடன் செயல்பட்டு கனிமத் திருட்டில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்ற வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளைக் கண்டறிந்து சீல் வைக்க வேண்டும்.

சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கூட்டம் நிறைவடைந்த பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு கனிம நிறுவனத்தை ஆய்வு செய்தார்.

அப்போது வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள மகி மண்டலம், ரெண்டாடி, கொடக்கல் ஆகிய கிராமங்களில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் தொடங்கப்படவுள்ள கறுப்பு கிரானைட் குவாரி பணிகளை விரைந்து தொடங்கவும், புதிய கனிம வளப் பகுதிகளை கண்டறிந்து, சுரங்க குத்தகை கொடுத்து லாபகரமாக சந்தைப்படுத்தவும் அலுவலர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

சுற்றுச்சூழல் அனுமதியை விரைவில் பெறவேண்டும்

அதன் பின்னர் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தை ஆய்வு செய்து, சுழற்சூளைப் பிரிவு, நிலைச்சூளைப் பிரிவு ஆகிய இரு தொழிற்சாலைகளும் தற்போது சுற்றுச்சூழல் அனுமதியுடன் இயங்குவதுபோல், செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : தேவையை சமாளிக்க அதிக விலைக்கு மின்சாரம் - முன்னாள் அமைச்சர் தங்கமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.