ETV Bharat / state

கிராமத் தொழிலாளர்கள் இந்தாண்டு இறுதிவரை அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

author img

By

Published : Sep 4, 2021, 4:59 PM IST

கிராமத்தில் உள்ள தொழிலாளர்கள் இந்தாண்டு இறுதிவரை தங்களுடைய அட்டையைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

village-workers-can-renew-the-card-till-the-end-of-this-year
village-workers-can-renew-the-card-till-the-end-of-this-year

சென்னை : சட்டப்பேரவையில் இன்று (செப்.4) தொழிலாளர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை பேசும்போது, “கிராமத்தில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாத்திட அவர்கள் பதிவு செய்தலிலும், புதுப்பித்தலிலும் உள்ள சிரமத்தைப் போக்க வேண்டும். மேலும் 2010ஆம் ஆண்டிலிருந்து புதுப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

அப்போது, இதற்குப் பதில் அளித்துப் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஏற்கனவே 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பதிவு செய்யத் தவறியவர்களுக்கு 90நாள்கள் கூடுதலாக அவகாசம் வழங்கியுள்ளோம். மேலும் 2010லிருந்து விடுபட்டவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச்சென்று பரிசீலனை செய்யப்படும்.

கிராமத்தில் உள்ள தொழிலாளர்கள் புதுப்பிக்கும் காலத்தை அரசானது டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும் இணையவழி வலியாகவும், பழைய முறையிலும் பதிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

இதையும் படிங்க : எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சு காணொலிகளையும் வெளியிட கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.