ETV Bharat / state

இலங்கை பொருளாதார நெருக்கடி - 5 லட்சம் வழங்கிய விஜயகாந்த்...

author img

By

Published : May 4, 2022, 10:22 AM IST

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்  ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மக்களுக்கு 5 லட்சம் வழங்கிய விஜயகாந்த்... vijayakanth-said-5-lakh-rupees-will-be-provided-to-chief-minister-relief-fund-on-behalf-of-dmdk-to-help-people-of-sri-lanka
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மக்களுக்கு 5 லட்சம் வழங்கிய விஜயகாந்த்... vijayakanth-said-5-lakh-rupees-will-be-provided-to-chief-minister-relief-fund-on-behalf-of-dmdk-to-help-people-of-sri-lanka

சென்னை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து நேற்று (மே.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தச் சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேமுதிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம்
தேமுதிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம்

நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்குத்தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-Gஇன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.@CMOTamilnadu pic.twitter.com/SXW6mibrze

    — Vijayakant (@iVijayakant) May 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், ஈகைப் பண்பு நிறைந்த தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுகூடி உதவிடுவோம். நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் அல்லலுறும் இலங்கை மக்களைக் காத்திடுவோம் என்றும் திமுக சார்பில் ரூ.1 கோடியும் மற்றும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

  • ஈகைப் பண்பு நிறைந்த தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுகூடி உதவிடுவோம்!

    நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் அல்லலுறும் இலங்கை மக்களைக் காத்திடுவோம்!

    திமுக சார்பில் ரூ.1 கோடியும் - கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.#TNhelpsSriLanka pic.twitter.com/EUktFz7j8z

    — M.K.Stalin (@mkstalin) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்' - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.