ETV Bharat / state

Vijai Makkal Iyakkam: களமிறங்கிய விஜய் ரசிகர்கள்.. மாநிலம் முழுவதும் அதிரடி..!

author img

By

Published : May 25, 2023, 7:27 PM IST

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மக்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Etv Bharat
Etv Bharat

சென்னை: நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்னோட்டமாக தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வருகின்ற மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பசியினை போக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் மே 28ஆம் தேதி அன்று “உலக பட்டினி தினம்” அனுசரிக்கப்படுகிறது. உலகலவில் நீண்டகாலம் பட்டினியால் வாடும் மக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்படுகிறது.

“தளபதி” அவர்களின் சொல்லுகிணங்க, உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு பசி என்னும் பிணி போக்கிடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தளபதி விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக “தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்” திட்டம் மூலம் வருகின்ற 28.5.2023 (ஞாயிறு) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம், மற்றும் பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பசியால் வாடும் மக்களுக்கு இயன்ற வரை உணவளித்து விழிப்புணர்வினை சமுதாயத்தில் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தளபதி விஜய் மக்கள் இயக்கம் செயல்படுகிறது” என புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் விஜய் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களை ஜூன் மாதம் நேரில் சந்தித்து நிதி வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல பொறுப்புகளில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் உறுப்பினர் சேர்க்கையையும் தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருச்சி என்றாலே திருப்பம்.. தமிழ்நாடு காத்திருக்கு.. நடிகர் விஜய் பெயரில் ஊரெல்லாம் விளம்பரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.