ETV Bharat / state

தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:56 PM IST

Thalapathy Vijay: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy Vijay
சென்னையில் லலித் குமார் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரித்து இருந்தார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவ. 23) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, லலித் குமார் லியோ படம் மட்டுமின்றி, மாஸ்டர், காத்து வாக்குல ரெண்டு காதல், மகான், கோப்ரா போன்ற படங்களையும் தயாரித்து உள்ளார். அதுமட்டுமின்றி விஜய்யின் உறவினரும் கூட. இந்த நிகழ்ச்சிக்கு விஜய் லியோ பட கெட்டப்பிலேயே வந்துள்ளார். இது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லலித் குமார் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய தயாரிப்பாளராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தனது 68வது படத்தின் பூஜையில் வித்தியாசமான கெட்டப்பில் வந்தார். ஆனால் தற்போது அவரது தோற்றம் வேறு மாதிரி உள்ளது. இதையும் ரசிகர்கள் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 95 வயது மூதாட்டியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட முதியோர் பென்ஷனை திருப்பி எடுத்த அரசு… காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.