ETV Bharat / state

டிச 31 இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை : சென்னை காவல் துறை

author img

By

Published : Dec 30, 2021, 10:21 AM IST

சென்னையில் டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு மேல் வாகன போக்குவரத்திற்கு சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.

டிச 31 இரவு 12 மணிக்கு  மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை : சென்னை காவல் துறைடிச 31 இரவு 12 மணிக்கு  மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை : சென்னை காவல் துறை
டிச 31 இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் வாகனப் போக்குவரத்திற்குத் தடை : சென்னை காவல் துறை

சென்னை:சென்னையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய வாகனப் போக்குவரத்தைத் தவிர மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

தற்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு மேல் அத்தியாவசிய தேவைகள் தொடர்பான வாகன போக்குவரத்தை தவிர, மற்ற வாகன போக்குவரத்திற்கு 01.01.2022 அன்று காலை 05.00 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே,பொதுமக்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட 31.12.2021 அன்று இரவு 12.00 மணிக்கு முன்பு தங்கள் பயணங்களை முடித்துக்கொள்ளுமாறு சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள்களை கண்டறிய மோப்ப நாய்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.