ETV Bharat / state

1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை அடைய தமிழ்நாட்டிற்கு வாழ்த்துகள் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 12:28 PM IST

Union Minister Piyush Goyal Speech in TNGIM 2024: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ல் தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகள் கூறியதோடு, 1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Union Minister Piyush Goyal Speech TNG2024
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

சென்னை: 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று (ஜன.7) மிக பிரம்மாண்டமாக தொடங்கியது.

இதில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தின் 1 ட்ரில்லியன் பொருளாதாரம் இலக்கை விரைவில் அடைய வாழ்த்துகிறேன் என உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு இல்லாதது துரதிஷ்டம் என்றார். 2047 இந்தியா வளர்ந்த நாடாக 5 திட்டங்களை முன்வைத்து காலனி ஆதிக்க மனநிலை மாறவேண்டும், பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டும், ஒற்றுமையே இலக்காக இருக்க வேண்டும், 140 கோடி மக்களுக்கும் அதற்காக இணைந்து செயல்பட வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.

தமிழகம் கலாச்சாரம், பண்பாடு, இயற்கை வளம் உள்ளிட்டவைகளை கொண்ட மாநிலமாக உள்ளது. சென்னை வர்த்தக மையமாக மத்திய மாநில அரசுகள் இணைந்து வளர்ச்சிக்கு இதுபோன்ற ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதித்யா எல்1 விண்கலம் தனது இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளதற்கும் இதில் முக்கிய பங்காற்றிய இத்திட்டத்தின் இயக்குனர் நிகர் சாஜிக்கும் பாராட்டுகள் என தெரிவித்தார்.

இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தமிழ்நாடு உறவு காட்சிப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவிலிருந்து எக்ஸ்போ பெவிலியனின் பகுதியிலிருந்து 80-க்கும் மேற்பட்ட முக்கிய பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: கோலாகலமான தொடக்க விழாவின் நேரலை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.