ETV Bharat / state

‘உங்கள் மகன் பிசிசிஐ தலைவர் ஆனது எப்படி?’ - அமித்ஷாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த உதயநிதி!

author img

By

Published : Jul 29, 2023, 5:14 PM IST

Updated : Jul 29, 2023, 5:58 PM IST

ராமேஸ்வரத்தில் நேற்று பேசிய அமித்ஷா, மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என ஆசை இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு, பதிலளிக்கும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “உங்களுடைய மகன் பிசிசிஐ-ன் தலைவர் ஆனது எப்படி?’” என அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "என்னை முதலமைச்சர் ஆக்குவது மட்டும்தான் திமுகவின் லட்சியம் என அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு வந்து கூறிவிட்டு சென்றுள்ளார். நாம் மக்களை சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று அமைச்சராக இருக்கிறேன். உங்களுடைய மகன் எப்படி பிசிசிஐ-ன் தலைவர் ஆனார்?, மகன் எத்தனை போட்டிகளில் விளையாடியுள்ளார்?.,உங்களுடைய மகன் எத்தனை ரன் அடித்தார்? அதை நான் கேட்டிருக்கேனா?.

அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. இவர் ஜெயின் குசும் பின்சர்வ் இன்று நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2014 ஆம் ஆண்டு 75 லட்ச ரூபாயாக இருந்த நிறுவனத்தின் மதிப்பு, தற்பொழுது 130 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. எப்படி வந்தது இந்த வளர்ச்சி?. இதற்கெல்லாம் அமித்ஷா பதில் சொல்வாரா?. இவர் தமிழ்நாட்டுக்கு வந்து என்னை குறை கூறிவிட்டு சென்று இருக்கிறார்" என காட்டமாக கூறினார்.

முன்னதாக ராமேஸ்வரத்திலிருந்து சென்னை வரை 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் அண்ணாமலை மேற்கொள்ளும் பாத யாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் பேசிய அமித்ஷா, "எதிர்க்கட்சிக் கூட்டணியினர் நாட்டை வளர்க்க வேண்டும் என்று நினைக்கவில்லை, அவர்களின் குடும்பத்தை வளர்க்க நினைக்கிறார்கள். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க வேண்டும் என்று ஆசை.

மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதியை முதலமைச்சராக்க வேண்டும் என்று விருப்பம். பீகாரில் லாலு பிரசாத் யாதவருக்கு தேசஸ்வி யாதவை முதலமைச்சராக்க வேண்டும் என்று விருப்பம். மம்தா பானர்ஜிக்கு அவரது மருமகனை மேற்குவங்க முதலமைச்சராக்க வேண்டும் என்று ஆசை. மகாராஷ்டிராவில் உத்தே தாக்கரேவிற்கு தனது மகனை முதலமைச்சராக வேண்டும் இன்று விருப்பம். இவர்கள் இந்தியாவையோ, தமிழ்நாட்டையோ வலுப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை" என குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், "காங்கிரஸ் மற்றும் திமுக என்றாலே மக்களுக்கு காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் ஊழல், இஸ்ரோ ஊழல் உள்ளிட்ட ஊழல்கள் தான் நினைவுக்கு வருகிறது. இந்த காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கையில் தமிழர் படுகொலை நடந்தது. தமிழக மீனவர்கள் படுகொலைக்கு திமுகவும் காங்கிரஸும் தான் காரணம்.

முதலமைச்சர் ஸ்டாலின், தனது ரகசியங்களை செந்தில் பாலாஜி வெளியிட்டுவிடுவார் என்ற பயத்தில்தான் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவில்லை" என விமர்சித்தார். தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமித்ஷா பேசினார்.

இதையும் படிங்க: ‘காங்கிரஸ் - திமுக என்றாலே ஊழல் தான் நினைவிற்கு வரும்’ - அமித்ஷா விமர்சனம்!

Last Updated :Jul 29, 2023, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.