ETV Bharat / state

114 கோடி மோசடி வழக்கில் இரண்டு பேர் கைது

author img

By

Published : Sep 21, 2022, 6:42 AM IST

வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து ரூ.114 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த விவகாரத்தில் சென்னை தனியார் நிறுவன இயக்குனர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

114.கோடி ரூபாய் மோசடி வழக்கில் இரண்டு பேர் கைது
114.கோடி ரூபாய் மோசடி வழக்கில் இரண்டு பேர் கைது

சென்னை: போர்ச்சுகல் நாட்டை தலைமையிடமாக கொண்ட பெட்டிக்கோ கமர்ஷியோ என்ற நிறுவனத்தின் கிளை ராமாபுரம் டிஎல்எப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. கனிமவளம் வர்த்தக தொழில் தொடர்பாக சுமார் ரூ.114 கோடி முதலீட்டை பெற்ற கலால் குழும நிறுவனம் மோசடி செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் என்ற இரண்டு இயக்குனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கனிமவள வர்த்தகம் தொடர்பாக கனரக வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கியதாக போலி ஆவணம் தயாரித்தும், மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் தனியார் நிறுவனத்திடம் தொழில் ஒப்பந்தங்கள் பெற்றதாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக வெளிநாட்டு நிறுவனமான பெட்டிக்கோ கமர்ஷியோ நிறுவனம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது.

அதன் அடிப்படையில் கல்லால் குழுமம், மற்றும் அதன் இயக்குனர்கள் நிர்வாகிகள், சரவணன் பழனியப்பன் விஜய் ஆனந்த் அரவிந்த் ராஜ், விஜயகுமார் லட்சுமி முத்துராமன், பிரீத்தா விஜய் ஆனந்த் என ஏழு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:CCTV: 'எவ்வளோ நேரம் தான் நானும் ட்ரை பண்றது' - புல்லட் பைக்கை திருடமுயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.