ETV Bharat / state

கடத்தப்பட்ட லாக்டவுன் மீட்பு - இருவர் கைது

author img

By

Published : Feb 10, 2022, 5:33 PM IST

தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக கட்டுமான தொழிலாளியின் குழந்தையை கடத்திச் சென்ற இளைஞர் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கடத்தப்பட்ட குழந்தை மீட்பு
கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சென்னை: அம்பத்தூர், காந்திநகர், தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுவருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை செய்துவரும் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த கிஷோர், அவரது மனைவி புத்தினியின் லாக் டவுன் என்ற பெயர் கொண்ட ஒன்றை வயது ஆண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை மதியம் காணாமல்போனது.

இது குறித்து குழந்தையின் தந்தை கிஷோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் தனிப்படை காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.

குழந்தை கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் குழந்தையை தேடும் பணியில் இரண்டு நாட்களாக தீவிரமாக ஈடுபட்டார்கள்.

குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து குழந்தையை தேடும் பணியிலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் திங்கள் இரவு சுமார் 11 மணியளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து ஒன்று நின்று கொண்டு இருந்தது.

இந்த பேருந்தில் நடத்துநர் கோவிந்த என்பவர் இரவு பேருந்து வாகனத்தில் ஏறி பேருந்தின் மின் விளக்குகள் ஸ்விட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது பேருந்தின் பின் இருக்கையில் ஆண் குழந்தை ஒன்று துங்கிக்கொண்டிருதுள்ளது. ஆனால், குழந்தையின் அருகில் யாருமில்லை.

இதனைக் கண்ட நடத்துநர் கோயம்பேடு காவல் நிலையம் சென்று தகவல் தெரிவித்திருக்கிறார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு காவல் துறையினர், அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையாக இருக்கலாம் என சந்தேகித்து அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இதையடுத்து ராமசாமி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர், குழந்தையின் போட்டோவை வைத்துப் பார்த்ததில் தேடப்பட்டு வந்த குழந்தை லாக்டவுன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதன் பின்னர் அம்பத்தூர் காவல் துறையினர், குழந்தையின் தாய் தந்தையரை அழைத்துச் சென்று குழந்தையை அதிகாலை 1 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவல் துறை ஒரு இளைஞன் குழந்தையை தூக்கி செல்வதை கண்டு பிடித்தனர்.

மேலும், யார் அந்த நபர் என்பது குறித்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் குழந்தையை தூக்கிச் சென்றது ரயில் விஹார் எனும் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் சென்னை அடுத்த மறைமலை நகர் பகுதியில் இருந்த அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தான் இந்த கட்டுமான இடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவதாகவும், தன்னுடன் படித்த நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளனர்.

கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

எனக்கு திருமணமாகாத நிலையில் அவர்களை போன்று எனக்கும் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்க ஆசையாக இருந்தது, எனக்கென்று ஒரு வாரிசு வேண்டும் என நினைத்து ஒரிசா மாநில தொழிலாளி சுஷாந்த் பிரதான் உதவியுடன் குழந்தையை கடத்தியதாக தெரிவித்துள்ளார்.

அக்குழந்தையை தனக்காக வளர்க்கும்படி தனக்கு தெரிந்த பெண்ணிடம் கேட்டுள்ளார் அதனை அவர் மறுக்கவே கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட இருவரையும் கைது செய்த காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட பணம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.