ETV Bharat / state

முதுகலை கணினி ஆசிரியர் பணிக்குத் தேர்வானவர்கள் சான்றிதழ்களை பதிவேற்ற அறிவுரை!

author img

By

Published : Nov 29, 2019, 8:27 AM IST

சென்னை: முதுகலை கணினி ஆசிரியர் பணிக்குத் தேர்வான 1565 நபர்கள், வரும் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதிக்குள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கணினி ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது தேர்வில் தகுதி அடைந்தவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தேர்வர்களின் தேர்வின் விவரப்பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை டிசம்பர் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை தேர்வர்கள் உரிய காலத்திற்குள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதற்காக தகுதி பெற்ற 1565 தேர்வர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

மேலும் தேர்வர்கள் பதிவேற்றம் செய்யும் பொழுது அளிக்க வேண்டிய ஆவணங்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதன் முறையாக சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு அடையாளச் சான்றிதழ், வழங்குவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் புகைப்படத்துடன் விண்ணப்பம் அளிக்க வேண்டுமென அறிவுரை கூறியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்முறையாக ஆன் - லைனில் நடத்தப்பட்ட தேர்வினை 26 ஆயிரத்து 882 பேர் எழுதினர். அவர்களுக்கான உத்தேச விடைக் குறிப்புகள் ஜூலை மாதம் 29ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

மேலும் இந்தத் தேர்வு முடிவு மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 814 கணினி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்படவுள்ளனர்.

இதையும் படிங்க: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் பணி!

Intro:முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி
சான்றிதழ்களை பதிவேற்ற அறிவுரை


Body:முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி
சான்றிதழ்களை பதிவேற்ற அறிவுரை
சென்னை,
முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு தேர்வான 1565 நபர்கள் வரும் 2ம் தேதி முதல் ஐந்தாம் தேதிக்குள் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு ஆன்லைன் மூலம் ஜூன் மாதம் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்விற்கான தேர்வு மதிப்பெண் முடிவுகள் நவம்பர் 25 ம் தேதி(இன்று) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வர்களின் மதிப்பெண்களும் வெளியிடப் பட்டுள்ளன.

தற்போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர் தேர்வர்களின் தேர்வின் விவரப்பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை டிசம்பர் 2-ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை தேர்வர்கள் உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக தகுதிப்பெற்ற 1565 தேர்வர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மேலும் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் தேர்வர்கள் பதிவேற்றம் செய்யும் பொழுது அளிக்க வேண்டிய ஆவணங்கள் இன் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி முதன் முறையாக சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு அடையாளச் சான்றிதழ் வழங்குவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் புகைப்படத்துடன் விண்ணப்பம் அளிக்க வேண்டுமென அறிவுரை கூறியுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்முறையாக கம்ப்யூட்டர் மூலம் ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்வினை 26 ஆயிரத்து 882 பேர் எழுதினர். அவர்களுக்கான உத்தேச விடை குறிப்புகள் ஜூலை மாதம் 29ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மேலும் இந்த தேர்வு முடிவு மூலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 814 கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.