ETV Bharat / state

புயல் எதிரொலி: சேலம் மார்க்கத்தில் சென்னை செல்லும் 8 ரயில்கள் ரத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 5:29 PM IST

Trains to Chennai Cancelled Due to Michaung Cyclone: மிக்ஜாம் புயல் காரணமாக சேலம் மார்க்கம் வழியாக சென்னை செல்லும் 8 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயிவே அறிவித்துள்ளது.

சென்னை செல்லும் 8 ரயில்கள் சேவை ரத்து
சென்னை செல்லும் 8 ரயில்கள் சேவை ரத்து

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (டிச. 3) மிக்ஜாம் (Michaung) புயலாக வலுப்பெற்றது. இந்த புயலால் சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், மிக்ஜாம் புயலானது சென்னைக்கு மிக அருகில் இருப்பதனால், தொடர்ந்து சூரைக் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கு சூழலில், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் தண்டவாளங்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து, கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பேசின் பிரிட்ஜ் - வியாசர்பாடி இடையே ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இன்று (04.12.2023) நிறுத்தம் செய்யப்பட்டுள்ள ரயில் சேவைகள்:

1. மேட்டுப்பாளையம் - சென்னை சென்ட்ரல் செல்லும் நீலகிரி (12672 ) விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. கோவை - சென்னை சென்ட்ரல் செல்லும் சேரன் (12674) விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3. ஈரோடு - சென்னை சென்ட்ரல் செல்லும் ஏற்காடு (22650) விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4. பாலக்காடு - சென்னை சென்ட்ரல் (கரூர், நாமக்கல், சேலம் வழியாக) செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

5. ஆலப்புழா - சென்னை சென்ட்ரல் செல்லும் (22640) விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

6. மங்களூர் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் செல்லும் (12602) விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

7. திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் செல்லும் (12624) ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

8. மங்களூர் சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் செல்லும் (12686) விரைவு ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.