ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 1 PM

author img

By

Published : Jun 22, 2021, 1:07 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்  ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்  top ten news at 1 pm  latest news  top news  top ten news  tamilnadu latest news  tamilnadu news  etvbharat
1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 1 PM

1. உதயசூரியனின் உரையைத் திருத்திய ஸ்டாலின்!

ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர் உதயசூரியனின் உரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியுள்ளார்.

2. விவேக், கி.ரா மறைவுக்கு இரங்கல் தீர்மானம்

நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. பேரவையின் மாற்றுத்தலைவர்களை அறிமுகம் செய்து வைத்த சபாநாயகர்

சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா, துரைசந்திரசேகரன் ஆகியோரை மாற்றுத்தலைவர்களாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

4. 3 லட்சம் கோவாக்சின் சென்னை வருகை

ஹைதராபாத்திலிருந்து மூன்று லட்சத்து 10 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தடைந்தது.

5. 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் - செப்டம்பர் 15க்குள் நடத்த உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6. 42 ஆயிரமாக குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

இந்தியாவில் 91 நாள்களுக்குப் பின்னர், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 42 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

7. காங். உள்கட்சி மோதல்: பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டுவர களமிறங்கிய ராகுல்

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தில் கட்சியினரிடையே நிலவும் உள்கட்சி மோதலைத் தடுத்து அவர்களுக்குள் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் நோக்கில் தலைநகர் டெல்லியில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

8. முதியவருக்கு 30 நிமிடங்களுக்குள் 2 தவணை தடுப்பூசி: ஒடிசாவில் அதிர்ச்சி

ஒடிசாவில் முதியவர் ஒருவருக்கு, 30 நிமிடங்களுக்குள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9. ஜூடோ பயிற்சியாளர் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு!

சென்னையில் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜூடோ பயிற்சியாளர் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் கொடுத்த நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

10. ’பீஸ்ட் மோடுலேயே இருங்க’ - விஜய்யை வாழ்த்திய தனுஷ்

தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.