ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 1 PM

author img

By

Published : Jun 21, 2021, 12:57 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

top ten news at 1 pm  top ten news  latest news  tamilnadu news  news update  ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்  மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்
1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 1 PM

1. 'நீட், வேளாண் சட்டம் ரத்து, தமிழுக்கு முன்னுரிமை, நிதித் துறை குழு' - ஆளுநர் உரை

நீட், வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை, இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை, நிதித் துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைப்பு எனச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையின் சாரம்சத்தைப் பார்க்கலாம்.

2. 'மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரம்' - தலை நிமிரவைத்த உதயநிதியின் செயல்

மனிதக் கழிவுகளை இயந்திரத்தைக் கொண்டு அகற்றும் முறையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயதிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

3. 'டாஸ்மாக் மதுபானக்கடைகளை மூடவும்' - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நந்தினி ஆனந்தன் கடிதம்

டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடக்கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, மது எதிர்ப்பு இயக்கப் போராளி நந்தினி ஆனந்தன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

4. நீட் தேர்வில் விலக்குப் பெற சட்டம் இயற்றப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளார். அந்தக் குழுவின் அறிக்கை வந்த பின்னர், குழுவின் அறிக்கையுடன் சேர்த்து, தீர்மானம் இயற்றி அனுப்பினால் அதற்கு வலுக்கிடைக்கும் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

5. 'வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அதனைச் செய்ய மறுப்பது மக்களை ஏமாற்றும் வேலை'

பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

6. 2 வயது குழந்தையின் அசத்தல் நினைவாற்றல்!

புதுச்சேரியில் இரண்டு வயதே ஆன குழந்தை தேசிய தலைவர்கள், காய்கறிகள், வண்ணங்கள், விலங்குகளின் பெயரை அப்படியே சொல்லி 'India Book of Records 2021'இல் இடம்பிடித்துள்ளார்.

7. இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8. ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள்

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் ஒரே இரவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உயர்மட்ட கமாண்டர் உள்பட மூவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

9. மைதானத்தில் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

அஜித்தின் ரசிகர்கள் சிலர் கிரிக்கெட் மைதானத்தில் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

10. ‘மெஹ்ரேஸிலா’ - மாநாடு படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு!

நடிகர் சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.