ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1 Pm

author img

By

Published : Jun 14, 2021, 1:27 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

top ten news at 1 pm  top ten news  latest news  tamilnadu latest news  1 மணி செய்திச் சுருக்கம்  ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்  மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1 Pm

'கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துக' - வைகோ

சிமெண்ட், கம்பி, கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை: திமுக எம்எல்ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரோனா காலத்தில் தனியார் பள்ளி கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்து திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கல்வித் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாலுகா வாரியாக தடுப்பூசி போடும் பணி: ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திய மக்கள்

கன்னியாகுமரியில் தாலுகா வாரியாக தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை - அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் பெற்றோர்கள் எங்களுக்கு அளித்துள்ள மனு, அனுப்பியுள்ள மெயில் உள்ளிட்டவற்றில் 9ஆம் வகுப்பில் தங்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ஒன்றிய அரசின் ஹைட்ரோகார்பன் ஏலம்: ஸ்டாலின் நிலைப்பாடுக்கு அன்புமணி வரவேற்பு!

ஸ்டாலினின் இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இந்த உறுதியை செயலிலும் காட்டி, காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்க வேண்டும்.

இஸ்ரேல் புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்ரேல் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நெல்லை ஆட்சியரகத்தில் இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்று இளைஞர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் போட்டியில் பந்தயம்: 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டிகளில் சட்டவிரோதமாகப் பந்தயம் கட்டி விளையாடிய நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

என்னது சாக்‌ஷிக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகை சாக்‌ஷி திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு அழகி பிந்துவுக்குப் பிறந்தநாள்

நடிகை பிந்து மாதவி இன்று தனது 35ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவரும் நிலையில், #HBDBINDUMADHAVI என்ற ஹேஷ் டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.