ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 9 am

author img

By

Published : Jun 7, 2021, 8:59 AM IST

ஈ டிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 9 am
Top 10 news @ 9 am

1. கரோனா நோயாளிகளுக்கு 'செக்' - மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

கரோனா தொற்று அறிகுறிக்காக மருந்து வாங்குவோரின் விவரங்கள் தினமும் அனுப்பிவைக்க மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் அவலநிலை; உறுப்பினர்கள் ஆதங்கம்

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அமரவைத்து விசாரணை செய்வதற்குக்கூட இடம் இல்லாத அவலநிலை நிலவிவருகிறது.

3. இன்று அமலுக்கு வருகிறது ஊரடங்கில் புதிய தளர்வுகள்!

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு உத்தரவு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றுமுதல் அரசு அறிவித்த புதிய தளர்வுகள் அமலுக்கு வருகிறது.

4. திறக்கப்படாத மின்னணு கடைகள்: பரிதவிக்கும் வியாபாரிகள்!

கடந்த முறை செயல்படுத்தப்பட்டதுபோல சுழற்சிமுறையில் கடைகளைத் திறப்பதற்குக்கூட வியாபாரிகள் தயாராகத்தான் இருக்கிறோம் என ரிச்சி தெரு வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

5. மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

6.தெருவில் உறங்கும் ஆதரவற்றோருக்கு போர்வையும் உணவும் வழங்கிய பெண் காவல் ஆய்வாளர்!

மதுரை: மாநகரின் தெருக்களில் ஆதரவற்ற நிலையில் தெருவில் வாழும் நபர்களுக்கு பெண் காவல் ஆய்வாளர் கலைவாணி, தனது சொந்தப் பணத்தில் உணவும் போர்வையும் வழங்கி உதவிபுரிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. ராமநாதபுரத்தில் ஊரடங்குத் தளர்வுகள் என்னென்ன? - ஆட்சியர் விளக்கம்!

ராமநாதபுரம்: ஜுன் 07 முதல் அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்குத் தளர்வுகளில் என்னென்ன கடைகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

8. தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை': ககன் தீப் சிங் பேடி

சென்னை: அடுத்த 10 நாள்களில் கரோனா தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டர்கள் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

9. மும்பையில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

10. ஆணையரிடம் அத்துமீறிய மேயர், பாஜக நிர்வாகிகள் - அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு

ஜெய்பூர்: மாநகராட்சி ஆணையரிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஜெய்பூர் மேயர், மூன்று பாஜக கவுன்சிலர்களை ராஜஸ்தான் அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.