ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 7 AM

author img

By

Published : Jun 15, 2021, 7:19 AM IST

ஈ டிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்

1. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று (ஜூன்.15) முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளகிறார்.

2. 'பிரைவசிக்கு முக்கியத்துவம்' - ஐபேட் ஓஎஸ்15இன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ஆப்பிள் நிறுவனம், ஐபேட் ஓஎஸ் 15இல் பல புதுப்பிப்புகள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஐபேட்டின் பெரிய திரைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. உச்சத்தில் பணவீக்கம் - சாமானிய மக்களை நெருங்கும் ஆபத்து!

இந்தியாவில் மே மாதத்தில் மொத்த பணவீக்க விகிதம் இதுவரை இல்லாத அளவில் 12.94% உயர்ந்துள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

4. ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் குறித்து பரிசீலனை - மம்தா பானர்ஜி

தயவு செய்து சாக்குபோக்கு கூற வேண்டாம், திட்டத்தை அமல்படுத்துங்கள் என மேற்கு வங்க அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

5. கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றே கண்டறியப்படாத மிக முக்கிய பகுதி எது தெரியுமா?

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்குக் கூட கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

6. ஊரடங்கு எதிரொலி: சேலத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை!

ஊரடங்கில் தளர்வுகள் இல்லாததால் சேலத்தில் 9, 11ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை இல்லை என்று மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

7. கண்டலேறு அணையிலிருந்து சென்னைக்கு குடிநீர் திறப்பு

சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

8. அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கன்னியாகுமரி, அய்யா வைகுண்டர் தலைமைப்பதி நிர்வாகி மகன் பால பிரசாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

9. தளர்வுகள் நீட்டிப்பு - புதுச்சேரி அரசு அறிவிப்பு!

ஹோட்டல்களில் இன்று (ஜூன்.15) முதல் 50 விழுக்காடு இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிட புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

10. சுகாசனம் செய்வது எப்படி? - விளக்கும் ஷில்பா ஷெட்டி

பார்சவ சுகாசனம் செய்யும்போது படிப்படியாக நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும் என ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.