தைத் திருநாளான இன்று எப்படி இருக்கப் போகிறது!

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 15, 2024, 7:01 AM IST

Updated : Jan 15, 2024, 7:08 AM IST

Pongal Rasi Palan in Tamil

Pongal Rasi Palan in Tamil : தைத்திருநாளான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் பலன்களைக் காணலாம்.

மேஷம்: உங்களுக்கு பெரிய அளவிலான நண்பர் வட்டம் இருக்கலாம். அவற்றில் பெரும்பாலானோர் சாதாரண நண்பர்களாக இருந்தாலும், சிலநேரங்களில் உங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, சில சிக்கல்களில் இருந்து உங்களை வெளிவர உதவலாம். நண்பர்களின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும் சந்தர்ப்பங்கள் அமையும்.

ரிஷபம்: மக்கள் மற்றும் பொருட்கள் மீது இன்று அதிக உணர்வுப்பூர்வமாக உரிமை கொண்டாடலாம். எல்லாவற்றின் மீதும், குறிப்பாக மனிதர்கள் மீது சந்தேகமும், அவநம்பிக்கையும், பாதுகாப்பற்ற உணர்வுகளும் தோன்றலாம். நெருக்கமானவர்களின் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மீதும் சந்தேகம் ஏற்படும் சாத்தியங்களும் உள்ளன. வீட்டில் சங்கடமான சூழலும், மகிழ்ச்சிக்கான ஏக்கமும் வெளிப்படும். இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்காது. கவனமாக, விவேகமாக நடந்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்: நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் சுற்றுலா செல்ல விரும்புவீர்கள். சில நாட்களுக்கு முன்னரே திட்டமிட்ட பயணமாகக்கூட இருக்கலாம். வேடிக்கை, கேளிக்கை, பொழுதுபோக்கு நிறைந்த நாள் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்: அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும், உங்களுடைய திறமையை உயரதிகாரிகள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். அதை மனதின் ஆழத்திற்கு எடுத்துச் செல்லவோ அல்லது சோகமாக இருக்கவோ வேண்டாம். இறுதியில், உங்கள் உறுதியான மனதைரியம் வெற்றி பெறும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மாலை வேளையில், பதற்றமான சூழல் ஏற்படலாம்.

சிம்மம்: வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் அதிக சவால்களையும், போட்டியையும் சந்திக்க நேரிடும். நிதி இழப்புகள் ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. முதலீடுகள் செய்யவோ, ஊக வணிகம் செய்யவோ இன்று உகந்த நாள் அல்ல. பிறருடன் சூடான விவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் எச்சரிக்கை தேவை.

கன்னி: இன்று திருப்புமுனையான முக்கியமான நாளாக அமையலாம். பிரகாசமான எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகளை ஆராயலாம். உறவு தொடர்பான விஷயங்கள் உங்கள் முன்னுரிமை பட்டியலின் முதலிடத்தை பிடித்திருக்கும். ஆன்மீகம் நோக்கிய உள்முக சிந்தனைகள் ஏற்படலாம். தியானம் அல்லது யோகா மீது கவனம் திரும்பும்.

துலாம்: வீரியம் மற்றும் உற்சாகம் நிறைந்த வித்தியாசமான நபராக இருப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் படைப்பு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் முன்னோக்கி செல்ல சந்தர்ப்பமும், மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளிநாட்டில் உயர் கல்வி பயில்வது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

விருச்சிகம்: உங்கள் விருப்பத்திற்குரிய பொருளை நோக்கி முழு ஆற்றல்களையும் திசை திருப்புவதற்கான வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. ஆராய்ச்சி சார்ந்த பணி உங்களின் முக்கிய விருப்பமாக இருக்கும். பழைய இனிமையான நினைவுகளையும், அனுபவங்களையும் ஒருவரிடம் பேசும் வாய்ப்புள்ளது.

தனுசு: ஈகையும், கருணையும் மனதில் ஊற்றெடுக்கும். வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருப்பதற்கான, பலன்களும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் கருத்துக்களை கேட்க சற்று நேரம் ஒதுக்கவும். நீங்கள் அவர்களுக்கு உரிய மதிப்பளிக்கும் உணர்வை அவருக்கு ஏற்படுத்துங்கள்.

மகரம்: கடினமான சூழ்நிலையிலும், மன உறுதியை இழக்காமல் இருப்பது எப்போதும் நல்லது. இலக்கை அடைய அது உதவும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல்கள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்பதால், வாதிடுவதை தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் காதல் துணையுடன் மனம் திறந்து பேசி, உங்கள் வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவத்தை புரிய வைப்பீர்கள்.

கும்பம்: சில சமயங்களில், நீங்கள் எல்லாவற்றையும் அறிய அதீத விருப்பம் கொண்டிருப்பீர்கள். இன்றும் அதுபோன்ற ஒரு நாளே. ஒரு தகுதி வாய்ந்த எதிரி என்பதையும் நிரூபிப்பீர்கள். எதிரிகளின் திட்டங்களை தெரிந்துக் கொள்வது, உங்களுடைய சொந்த நலனுக்கு நன்மை பயக்கும். இதற்கு நீங்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக கடுமையான சூழலில் உங்கள் வலிமையை நிரூபிப்பீர்கள்.

மீனம்: பணத்தை பெரிதாக மதிக்கமாட்டீர்கள். எதிர்காலத்திற்கான நிதி திட்டமிடல் என்பதும் உண்மையில் மிகவும் எளிதானது அல்ல. காலத்தை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்ளும் நபர் நீங்கள். ஆனால், வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை, கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. இறுதியாக உங்கள் நிதி தொடர்பான திட்டமிடல் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துகொள்வீர்கள். இந்த அறிவுரையை புறக்கணிக்க வேண்டாம்.

இதையும் படிங்க: தைத்திங்கள் முதல் வாரம் எப்படி இருக்கப் போகுது..!

Last Updated :Jan 15, 2024, 7:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.