ETV Bharat / state

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்; அனல் பறக்கும் சென்னை, பறக்கும் படை தீவிர சோதனை!

author img

By

Published : Jan 28, 2022, 7:09 PM IST

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 311 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டதாகவும் 2298 போஸ்டர்கள் மற்றும் 12 பேனர்கள் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

flying troops
flying troops

சென்னை : சென்னையில் தேர்தல் விதி முறை அமலுக்கு வந்ததால், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பணம், பரிசுப் பொருள்கள், போதைப் பொருள்கள், எடுத்துச் செல்கிறார்களா என பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்கு உள்படுத்தப்படுவர்களின் வாகன எண் மற்றும் பெயர் தொலைபேசி எண்களை கேட்டு பெற்றுக் கொள்கின்றனர். அரை மணி நேரத்திற்கு வெவ்வேறு இடங்களில் சோதனைகள் இருக்குமென்றும், நாளை அதே இடத்தில் வேறு நேரத்தில் சோதனை மேற்கொள்வோம் என பறக்கும் படையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN urban local election-  flying troops Intensive check in Chennai
நகர்புற உள்ளாட்சித் தேர்தல்; அனல் பறக்கும் சென்னை, பறக்கும் படை தீவிர சோதனை!
பறக்கும் படையில் ஒரு உதவி செயற்பொறியாளர், இரண்டு காவலர்கள் மற்றும் ஒரு ஒளிப்பதிவாளர்கள் இருப்பார்கள், சுழற்சி முறையில் மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படையினர் 45 பறக்கும் படைகள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
மேலும் தேர்தல் விதி முறை அமலுக்கு வந்ததால் அரசியல் சார்ந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 311 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டதாகவும், 2 ஆயிரத்து 298 போஸ்டர்கள் மற்றும் 12 பேனர்கள் அகற்றப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : திருச்சி உள்ளாட்சித் தேர்தல், முட்டி மோதும் அமைச்சர்கள், தரணி ஆள விருப்பம் இல்லாத பரணி!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.