ETV Bharat / state

நாமக்கல்,நாகப்பட்டினம் மருத்துவமனைகளை திறக்க முடியாமல் போனதற்கு காரணம் - அமைச்சர் சுப்பிரமணியன் பகீர் தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 5:53 PM IST

Helath minister Maa. subramanian speech: நாமக்கல் , நாகப்பட்டினம் மருத்துவமனைகளை திறக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது கேலிக்கூத்தாகும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

நாமக்கல்,நாகப்பட்டினம் மருத்துவமனைகளை திறக்க முடியாமல் போனதற்கு காரணம் - அமைச்சர் சுப்பிரமணியன் பகீர் தகவல்

சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மொத்தம் ரூபாய் 12.66 கோடி மதிப்பிலான ரூ.8.72 கோடி மதிப்புடைய நவீன 1.5 டெஸ்லா எம்ஆர்ஐ எந்திரம் மற்றும் ரூ 3.94 கோடி மதிப்பிலான குடல், இரைப்பை உள்நோக்கி கருவியை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆகஸ்ட் 24) திறந்துவைத்தார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு பல்வேறு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் பொருத்தப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. முன்னதாக இங்கு சி.டி. ஸ்கேன் கருவிகள், அல்ட்ரா சவுண்ட் கருவிகள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் தொடங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ இயந்திரம் இன்று துவக்கி வைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் முதன்முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . இந்த இயந்திரத்தில் பயோமெட்ரிக் மற்றும் நோயாளிகளை கையாள்வதற்கு ஆட்டோ பைலட் போன்ற சிறப்பு வசதிகள் உள்ளது. இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு நாளும் 500 க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டு 65 நாட்களில் 117 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், 15 அறுவை சிகிச்சை அரங்குகள் இங்கே பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதற்கு முன்னாள் ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனை கடந்த ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்டு 1 ஆண்டுகளுக்கு மேல் தான் 100 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. ஆனால் இங்கே 2 மாதங்களிலே அதைவிட அதிக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது ஒரு சாதனையாகும். இந்த சாதனை நிகழ்வதற்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் இந்த மருத்துவமனையில் உள்ளது தான்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவிகள் பொறுத்தப்பட்டு வருகிறது. இதில் 6 எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவிகள் பொது - தனியார் கூட்டு (Public Private Partnership) கீழ் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் புதிய எம்.ஆர்.ஐ.ஸ்கேன்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன்கள் பொறுத்தும் பணி தொடங்கப்படும்.

குடல், இரைப்பை கருவி 4 வகையான உள்நோக்கி கருவிகளும் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ளது . இந்திய அளவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத குடல், இரைப்பை உள்நோக்கி இரட்டை பலூன் எண்டோஸ்கோபி (Double Balloon Endoscopy) கருவி முதல் முறையாக இந்த மருத்துவமனையில் பொருத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் 20 அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை புறநோயாளிகளாக 20,000 பேரும், உள்நோயாளிகள் 1521 பேரும் சிகிச்சை பெற்று உள்ளனர். மேலும், 117 அறுவை சிகிச்சைகளும், 625 சிடிஸ்கேன், 22,549 இரத்த பரிசோதனைகள், 176 என்டோஸ்கோபி, 934 டிஜிட்டல் எக்ஸ்ரே, 100 டயாலிசிஸ் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றமா?: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற வாய்ப்பு இல்லை. முதலமைச்சர் அறிவிப்பின்படி இம்மருத்துவமனை கட்டப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய்க்கான அதிநவீன கருவி (Robotic Cancer Equipment) திறந்து வைத்தார் . கருவுற்ற ஒரு சில வாரங்களிலேயே கருவுற்ற குழந்தைகளின் குறைத்தன்மைகளை கண்டறிய ஆய்வகத்தினை திறந்து வைத்துள்ளார்.

மேலும் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், Stunt பொருத்துகின்ற பணியாக இருந்தாலும், அதிகம் நடந்துக் கொண்டிருக்கின்ற மருத்துவமனையாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை திகழ்கிறது. மேலும், இந்த ஓராண்டில் 11 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் தினந்தோறும் 400 முதல் 500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவந்தனர்.

ஆனால் தற்போது 1500 முதல் 2000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். எனவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாற வாய்ப்பு இல்லை. 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறந்து வைத்த போதே, நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல்லில் இருக்கின்ற மருத்துவக்கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், இந்த 2 அரசு மருத்துவக்கல்லூரியிலும் குடிநீர் வசதி என்பது சுத்தமாக கிடையாது. பொதுவாக பொதுப்பணித்துறை எந்த ஒரு புதிய கட்டிடங்கள் கட்டுவதாக இருந்தாலும் மண் பரிசோதனைகள் எடுப்பர்.

தண்ணீர் வசதி அற்ற மருத்துவமணை: தண்ணீர் வசதி மற்றும் கட்டிடத்தின் உறுதி தன்மைகள் ஆகியவற்றையும் பார்ப்பர். நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரியும், மருத்துவமனையும் சேர்ந்து இயங்கும் இடங்கள் ஆகும். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இங்கு வருகின்றனர். நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரியில் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தில் 1000 அடி அளவில் போர்வெல் போட்டாலும் தண்ணீரே வராத பகுதியில் இக்கட்டிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள விளைநிலத்தில் புதிய கட்டிடம் கட்ட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் சாலை வசதிகளும் கிடையாது. எங்களுக்கு தெரிந்த தகவல் என்னவென்றால் இக்கட்டிடம் அமையவிருக்கின்ற இடத்திற்கு அருகில் எதிர்கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவருடைய நிலம் உள்ளது, அந்த நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்காக அப்போது இங்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இக்கல்லூரி இங்கு வேண்டாம், ஈசிஆர் அருகில் உள்ள பகுதிகளில் புதிய கட்டடம் கட்டலாம் என்று கூறுகின்றனர். தற்போது இக்கட்டிடங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்த ரூ.33 கோடி தேவைப்படும். மேலும் காவேரி ஆற்றில் இருந்து 100 கி.மீ தூரத்திற்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும். இந்த பணிகள் செய்து முடிக்க மேலும் 2 வருடங்கள் ஆகலாம் என்று கூறுகின்றனர். நகராட்சிகளில் இருந்து ஒரு நாளைக்கு 2000 லிட்டர் தண்ணீர் மட்டுமே தரமுடியும் என்று கூறியிருக்கின்றனர்.

அது போதுமானதாக இல்லை. முன்னாள் அமைச்சர் இந்த 2 மருத்துவமனைகளையும் திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்வது கேலிக்கூத்தாகும். யாரோ ஒருவருக்காக அரசு மருத்துவமனையை பயன்படுத்தமுடியாக நிலத்தில் கட்டி முடித்துவிட்டு திறக்கவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார். இந்த மருத்துவமனையை திறக்க முடியாமல் போனதற்கு யார் கரணம் என்று அவர்களுக்கே தெரியும். ஆய்வு செய்ததில் 2 கிணறுகள் புதியதாக கட்டி அதன்மூலம் தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு இந்த 2 மருத்துவமனைகளும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "தலைவரே பைலட் இறக்கிவிட்டு போய்டுவாரு.." - மீண்டும் விமான சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.