ETV Bharat / state

சிபிஎஸ்இ அங்கீகாரம் என பொய் விளம்பரம்: நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை பதில் மனு!

author img

By

Published : May 24, 2023, 4:23 PM IST

சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ள பள்ளி என்று பொய் விளம்பரம் செய்து மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், அத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தும் தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய காஞ்சிபுரம் கோனேரி குப்பம் பகுதியைச் சேர்ந்த மோதிலால் என்பவர் தாக்கல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், '2001 ஆம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 96 குழந்தைகள் பலியான (2004 Kumbakonam School fire) சம்பவத்தையடுத்து, நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் வகுத்த விதிகளின் அடிப்படையில், தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து தமிழ்நாடு அரசு 2006 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்து இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

இதே சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றமும், பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தது என்றும் கல்வி உரிமைச் சட்டத்திலும், அரசு அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளி கட்டிடங்களுக்கு உரிமம் பெறுவது, கட்டிட ஸ்திரத்தன்மை சான்று பெறுவது உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்தச் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: "ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கக் கூடாது" - சுப்பிரமணிய சுவாமி!

ஆனால், மேன்ஷன் போல குறுகிய அறைகளுடன், எந்த அங்கீகாரமும், ஒப்புதலும் இல்லாமல், காஞ்சிபுரத்தில் 'விதை பப்ளிக் ஸ்கூல்' என்ற பள்ளி செயல்பட்டு வருவதாகவும், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். தகுதியான கட்டிட வசதி இல்லாமல், பொய் விளம்பரங்கள் மூலமாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளும் இந்த தனியார் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Sengol: நாடாளுமன்றத்தை ஆளப்போகும் தமிழ்நாட்டு சைவச் செங்கோல்.. நேருவுக்கு செங்கோல் கிடைத்த கதை!

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி மஞ்சுளா அமர்வில் இன்று (மே 24) விசாரணைக்கு வந்ததது. அப்போது, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நடவடிக்கையை துவங்கியுள்ளதாகவும், மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவர்களை அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: Madras High Court: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக சி.வைத்தியநாதன் நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.