ETV Bharat / state

மாநில கல்விக் கொள்கை பற்றி கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால நீட்டிப்பு

author img

By

Published : Aug 22, 2022, 8:45 PM IST

தமிழ்நாட்டில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு கருத்துக்களை தெரிவிப்பதற்கு மேலும் ஒரு மாசம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை  கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால நீட்டிப்பு
மாநில கல்விக் கொள்கை கருத்து தெரிவிக்க ஒரு மாதம் கால நீட்டிப்பு

சென்னை: மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கான உயர் மட்ட குழுவின் உறுப்பினர் செயலாளர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”தமிழ்நாட்டில் தனித்துவமான மாநில கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை சம்பந்தமாக பொதுமக்கள் கல்வியாளர்கள் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், மாநில கல்வி கொள்கை உயர் மட்ட குழு, centre of excellence building,3 வது தளம், களஞ்சியம் கட்டிடம் பின்புறம் அண்ணா பல்கலைக்கழகம் சென்னை 600025 என்ற முகவரிக்கும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை கருத்துக்களை அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாநில கல்விக் கொள்கை குழு மேலும் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற முடிவு செய்து கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. மேலும், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறும் பொருட்கள் நடத்திடுவும் மாநில கல்வி குழு வேர் மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், செப்டம்பர் 21 ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து கருத்துக்களை கூற விரும்புபவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்திலும், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் மேலும் இதர மண்டலங்களிலும் படிப்படியாக கருத்து கேட்டு கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’இன்னும் நிறைய சம்பவங்கள் காத்திருக்கு..!’ - முதலமைச்சர் அதிரடி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.