ETV Bharat / state

அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு.. ஆசிரியர்கள் கொந்தளிப்பு..

author img

By

Published : Dec 23, 2022, 6:31 AM IST

சென்னை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு: ஆசிரியர்கள் கொந்தளிப்பு
அரையாண்டுத் தேர்வு விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு: ஆசிரியர்கள் கொந்தளிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைந்து வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி உள்ள கடித்தில், அரையாண்டுத் தேர்வு விடுமுறைக் காலத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று சில மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாய்மொழியாக உத்தரவு வழங்கியுள்ளனர்.

காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சிறப்பு வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் என்றும் மாலை மாணவர்களுக்குச் சிற்றுண்டி தலைமை ஆசிரியர்கள், புரவலர்கள் மூலமோ அல்லது தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களின் சொந்தச் செலவிலோ சிற்றுண்டி வழங்க வேண்டும் என்றும் இதைப் பார்வையிட மற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்கே அன்றைக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் சென்று பார்வையிட வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பேருந்து வசதி இல்லாத கிராமப்புறங்களில் மாணவிகள் மாலை வீடு திரும்புவதில் சிரமம் இருக்கிறது. பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே விரைவில் நல்ல முடிவெடுத்து மாவட்டங்கள் தோறும் ஒவ்வொரு விதமாக இல்லாமல் சென்ற காலாண்டு விடுமுறைக் காலங்களில் "யாரும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது" என்று ஆணையிட்டதைப் போல ஆணையிட வேண்டும். அல்லது வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனில் அதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரையாண்டு விடுமுறைக்காலத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும், ஆசிரியர்களுக்கு மன ரீதியாக ஓய்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் முதன்மைக் கல்வி அலுலவர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவின் மூலம் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என கூறுகின்றனர். விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் போது, தற்பொழுதைய சூழலில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அல்லது பள்ளிகளில் ஏதேனும் அசம்பாதவிதங்கள் நடந்தாலோ அதற்கு ஆசிரியரே பொறுப்பேற்று தண்டனை அனுபவிக்க கூடிய சூழலும் உள்ளது. ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு அற்ற சூழல் உள்ளது. எனவே சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என்றால் அதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உரிய காலத்தில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தர உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.