ETV Bharat / state

விடுப்பு தராமல் அலைக்கழித்த அதிகாரிகள் - காவலர் தற்கொலை முயற்சி

author img

By

Published : Jul 17, 2022, 7:33 PM IST

வார விடுப்பு அளிக்காமல் அலைக்கழித்ததால் விரக்தியில் காவலர் ஒருவர் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விடுப்பு அளிக்காததால் தலைமை காவலர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி
விடுப்பு அளிக்காததால் தலைமை காவலர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

சென்னை: வேளச்சேரி காவல் நிலையத்தில் கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார். 2002ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்தவர். இவருக்கு கடந்த சில மாதங்களாக வார விடுப்பு அளிக்காமல் உயர் அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் எழுத்தராக பணியில் இருக்கும் ஞானசேகர் என்பவர் தனக்கு அனுசரித்து செல்லும் காவல் துறையினருக்கு மட்டும் வார விடுப்பு அளிப்பதாகவும், மற்றவர்களுக்கு விடுப்பு வழங்காமல், வாட்ஸ்ஆப் குழுவில் அவர்களை பற்றி அவதூறு பரப்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் செந்தில்குமார் என்ற தலைமை காவலர் வாட்ஸ்ஆப் குழுவில் எழுத்தருக்கு நீங்கள் செய்வது முறையல்ல, இதனால் பல காவலர்கள் மன உளைசாலில் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ஆய்வாளர் சந்திர மோகனிடம் முறையிட்டும் பயனில்லாமல் போனதானால், விரக்தியின் உச்சிக்கே சென்ற செந்தில்குமார் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனைக் கண்ட சக காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவலறிந்து கிண்டி உதவி ஆணையர் சிவா, அவரது அலுவலகத்தில் வைத்து செந்தில்குமார் மற்றும் எழுத்தர் ஞானசேகர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் 144 தடை உத்தரவு - மாவட்ட ஆட்சியர் பிறப்பிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.