ETV Bharat / state

அமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயற்சி!

author img

By

Published : Dec 21, 2020, 11:48 AM IST

சென்னை: பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் இல்லத்தை முற்றுகையிட முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை, உடற்கல்வி ஆசிரியர்களாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 13 ஆயிரம் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசிடம் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து-வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இல்லத்தை மகளிர் சிறப்பாசிரியர்கள் முற்றுகையிட முயற்சித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர், அமைச்சர் இல்லத்தையொட்டிய சாலையில் வாகனங்களை அனுமதிக்காமல் தடுப்புகளை அமைத்தனர். மேலும், கரோனா பரவல் காரணமாக அதிக நபர்கள் கூடுவதை தவிர்க்கும்படியும், சிறப்பாசிரியர்களிடம் காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.

காவல் துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க போராட்டத்தை கைவிட்ட சிறப்பாசிரியர்கள், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தங்களது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக, கோரிக்கை மனு அளித்த பகுதிநேர ஆசிரியர்கள் கூறினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.