ETV Bharat / state

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்.. ஓரிரு நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 10:41 PM IST

Tasmac staff Bonus: இன்னும் ஓரிரு தினங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான 20 சதவீதம் போனஸ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பதாக டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்

டாஸ்மாக் தொழிற்சங்கம்
டாஸ்மாக் தொழிற்சங்கம்

சென்னை: தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வைதுறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் டாஸ்மாக் ஊழியர்களின் தீபாவளி போனஸ் தொடர்பாக அனைத்து சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தப் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர் முன்னேற்ற சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பாட்டாளி தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம்

மேலும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் உள்ளிட்ட 21 டாஸ்மாக் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சருடன் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்கத்தினர், ”பல்வேறு டாஸ்மாக் பணியாளர்களின் சங்கங்களின் கோரிக்கையான 20 சதவீதம் போனஸ் தொகை உறுதி செய்யப்பட்டு முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று தருவதாக அமைச்சர் முத்துசாமி உத்தரவாதம் அளித்துள்ளார்.

இன்னும் ஓரிரு தினங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கான 20 சதவிகித போனஸ் அறிவிப்பு வெளியாகும். அமைச்சர் எடுத்துள்ள முயற்சி திருப்தி அளிக்கிறது. பார் வசதி குறித்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. அந்த தீர்ப்பிற்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவித்தனர்

இதையும் படிங்க: பொதுப்பணித்துறை ஒப்பந்தத்தில் வரி ஏய்ப்பு: மின் உபகரணங்கள் விநியோகம் செய்பவர் வீட்டில் சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.