ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,484 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Jun 28, 2022, 10:21 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 1,484 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு  கரோனா பாதிப்பு
தமிழ்நாடு கரோனா பாதிப்பு

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 22,137 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 1484 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் தமிழ்நாட்டில் இருந்த 1479 நபர்கள், அமெரிக்காவில் இருந்து வந்த இரண்டு நபர்கள், பிஜி மற்றும் குவைத் நாட்டில் இருந்து வந்த தலா ஒரு நபர், அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் உள்பட 1484 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 59 லட்சத்து 11 ஆயிரத்து 648 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் 4 லட்சத்து 71 ஆயிரத்து 289 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது 8970 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் அதிகரிக்கும் பாதிப்பு

மேலும் இன்று 736 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 293 என உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் தவிர மற்ற 37 மாவட்டங்களிலும் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் அதிகபட்சமாக 632 பேர், செங்கல்பட்டு 239, கோயம்புத்தூர் 70, திருவள்ளூர் 79, காஞ்சிபுரம் 59 பேர் இன்று புதிதாக நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

பரிசோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நோய் பரவல் விகிதம் மாநில அளவில் 5.8 என உள்ளது. ஆனால் இதே விகிதம் கோயம்புத்தூரில் 13.2 என உச்சபட்சமாக பதிவாகியுள்ளது. செங்கல்பட்டில் 10.7 சதவீதம் எனவும் சென்னையில் 7.5% எனவும் பதிவாகி வருகிறது. மாவட்டங்களில் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம்' - மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.