ETV Bharat / state

முதலமைச்சர் எங்கு சென்றாலும் விட மாட்டோம்...! - சென்னை போராட்டத்தில் அண்ணாமலை கொந்தளிப்பு

author img

By

Published : May 31, 2022, 7:12 PM IST

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு 20 நாட்களுக்குள் குறைக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும், 30 நாட்களுக்கு பிறகு திருச்சியில் பேரணியும் நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வலியுறுத்தி பாஜக சார்பில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. போராட்டத்தின்போது பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, "தேர்தல் வாக்குறுதிகளில் சொன்னதை திமுக செய்ய வேண்டும் என்று தான் இந்த போராட்டம். தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பாஜக பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது.

திமுக, முதலமைச்சர் ஸ்டாலினின் முதல் எதிரி ஆர்.எஸ்.பாரதி தான். திமுக தேர்தல் அறிக்கை தயாரித்தவரிடம் தான் பெட்ரோல் விலையைக் குறைக்க கேட்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி விஞ்ஞான பூர்வமாக நினைத்து பேசுகிறார். மக்கள் பணி செய்ய வேண்டிய அமைச்சர்கள் இப்போது ஊர் ஊராக சென்று உதயநிதியை அமைச்சராக்க திட்டம் போடுகிறார்கள்.

கட்சத்தீவை திமுகவால் மீட்க முடியாது: பாஜக கோட்டையை நோக்கி வரப்போகிறோம் என்று தெரிந்து முதலமைச்சர் டெல்டாவிற்கு சென்று விட்டார். முதலமைச்சர் எங்கு சென்றாலும் விட மாட்டோம். இன்னும் நான்கு நாட்களில் இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பாஜக வெளியிடும்.

தமிழகம் கஞ்சாவின் தலை நகரமாக மாறி வருகிறது. கொலைகள் எல்லாம் மானாட மயிலாட நிகழ்ச்சி மாதிரி நேரலை செய்யப்படுகிறது. பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதை மக்கள் கேட்க தயாராக இல்லை. கருவாட்டை விற்பது போல கட்சத்தீவை தாரைவார்த்து விட்டார்கள். இப்போது மீட்க போகிறேன் என சொல்கிறார்கள். திமுகவால் ஒரு போதும் கட்சத்தீவை மீட்க முடியாது.

கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது அதை எப்படி மீட்க வேண்டும் என மோடிக்கு தெரியும். நிச்சயம் மீட்போம். சென்னை நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதை பார்த்து மோடி பயந்துவிட்டதாக கூறுகிறார்கள். உண்மை தான். முதலமைச்சர் தப்பு தப்பாக பேசிய ஆங்கிலத்தை பார்த்து தான் பிரதமர் பயந்து போய்விட்டார்.

அண்ணாமலை பேச்சு

பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் 20 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம். 30 நாட்களுக்கு பிறகு திருச்சியில் பேரணி நடத்துவோம்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: பறையா என்ற வார்த்தையை பயன்படுத்திய அண்ணாமலை... வெடிக்கும் எதிர்ப்பு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.