ETV Bharat / state

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி தீர்வு புத்தகம் விற்பனை துவக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:04 PM IST

Tamil Nadu State Parent-Teacher Association: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் தயார் செய்யப்பட்ட வினா வங்கி, தீர்வு புத்தகம் விற்பனை இன்று (டிச.22) துவங்கியது.

Tamil Nadu State Parent-Teacher Association
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா, வங்கி தீர்வு புத்தகம் விற்பனை துவக்கம்!

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா வங்கி தீர்வு புத்தகம் விற்பனை துவக்கம்

சென்னை: தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து புத்தகங்களை அச்சிட்டு வழங்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் தற்பொழுது புத்தகங்களை அச்சிட்டு மாணவர்களுக்கு விற்பனை செய்ய துவங்கி உள்ளது.

மேலும், 2023-2024ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் மாதிரி வினாத்தாள் தொகுப்பு புத்தகங்கள், கணித தீர்வு புத்தகம் (தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில்) அச்சிடப்பட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யும் பணி துவங்கப்பட்டுள்ளது.

விலை: 10ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ரூ.120 (தமிழ் மற்றும் ஆங்கில வழி), 10ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.175 (ஆங்கில வழி), 10ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.175 (தமிழ் வழி), 12ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.160 (ஆங்கில வழி), 12ஆம் வகுப்பு கணிதத் தீர்வு புத்தகம் ரூ.160 (தமிழ் வழி), 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் ரூ.160 (ஆங்கில வழி), 12ஆம் வகுப்பு கணித COME புத்தகம் ரூ.160 (தமிழ் வழி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் சிறப்பம்சம்கள்: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு 6 மாதிரி வினாத்தாள்கள் வீதம், பொதுத்தேர்வு கட்டமைப்பின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு கணிதத்தீர்வு புத்தகத்தில் குறிக்கோள் வினாக்கள் உள்பட சுமார் 800க்கும் மேற்பட்ட பயிற்சி கணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடவரிசைக்கு கணிதத் தீர்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பாடநூலில் உள்ள அனைத்து பயிற்சி கணக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதுடன் ஆசிரியர், மாணவர்களுக்குத் தேவையான முக்கிய குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை எளிதில் புரிந்துகொண்டு, அதிகளவில் மதிப்பெண் பெறும் வகையில், COME புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாடநூலில் உள்ள அனைத்து வினாக்களும் 2, 3, 5 மதிப்பெண் வினாக்கள் என வகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வினாவின் விடைக்கு கொடுக்கப்படும் மதிப்பெண்கள், பொதுத்தேர்வில் எவ்வாறு பிரித்து வழங்கப்படுகிறது என்பதனை புரிந்து கொள்வதோடு, மாற்று முறையிலும் எவ்வாறு விடையளிக்கலாம் என புதுமையான முறையில் மாணவர்களுக்கு பெரிதும் பயன் தரும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பிற்கான அறிவியல் மற்றும் கலைப் பாடப்பிரிவிற்குரிய மாதிரி வினாத்தாள்களின் தொகுப்பு மற்றும் இயற்பியல் பாடத்திற்கான தீர்வு புத்தகம், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் விரைவில் வர இருக்கிறது.

இது குறித்து சென்னை கிறிஸ்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் கூறுகையில், “சென்னையில் மட்டும் 3 இடங்களில் இந்த புத்தகம் விற்பனை நடைபெறுகிறது. கிறிஸ்துவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புத்தகம் விநியோகிக்கப்படுகிறது. பள்ளி மூலமாகவும், பெற்றோர் மற்றும் மாணவர்கள் நேரடியாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் நாளை தொடங்குகிறது பொங்கல் விற்பனை கண்காட்சி.. இங்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.