ETV Bharat / state

Corona virus : தமிழ்நாட்டில் 741 பேருக்கு கரோனா பாதிப்பு

author img

By

Published : Nov 23, 2021, 10:52 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 825 என உயர்ந்துள்ளது. இதற்கிடையில், இன்று புதிதாக 741 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா
கரோனா

சென்னை: கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 8 ஆயிரத்து 536 நபர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக 741 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (நவ.23) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 548 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுக் கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மேலும் புதிதாக 741 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 26 லட்சத்து 29 ஆயிரத்து 830 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் 27 லட்சத்து 21 ஆயிரத்து 762 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8 ஆயிரத்து 536 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 808 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 76 ஆயிரத்து 825 என உயர்ந்துள்ளது.

அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 7 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகள் என 13 நோயாளிகள் இறந்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 401 என உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 119 நபர்களுக்கும், சென்னையில் 114 நபர்களுக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. பரிசோதனை செய்யப்படுபவர்களில் புதிதாகத் தொற்று கண்டறியப்படுவார்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நோய் பரவல் சதவீதம் 0.7 என தமிழ்நாட்டில் உள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு

  • சென்னை - 5,57,320
  • கோயம்புத்தூர் - 2,49,397
  • செங்கல்பட்டு - 1,73,361
  • திருவள்ளூர் - 1,20,020
  • ஈரோடு -1,05,847
  • சேலம் - 1,00998
  • திருப்பூர் - 96742
  • திருச்சிராப்பள்ளி - 78308
  • மதுரை - 75465
  • காஞ்சிபுரம் - 75457
  • தஞ்சாவூர் - 75982
  • கடலூர் - 64356
  • கன்னியாகுமரி - 62718
  • தூத்துக்குடி - 56468
  • திருவண்ணாமலை - 55152
  • நாமக்கல் - 53171
  • வேலூர் - 50110
  • திருநெல்வேலி - 49608
  • விருதுநகர் - 46382
  • விழுப்புரம் - 45984
  • தேனி - 43599
  • ராணிப்பேட்டை - 43526
  • கிருஷ்ணகிரி - 43787
  • திருவாரூர் - 41815
  • திண்டுக்கல் - 33200
  • நீலகிரி - 33977
  • கள்ளக்குறிச்சி - 31540
  • புதுக்கோட்டை - 30311
  • திருப்பத்தூர் - 29370
  • தென்காசி - 27385
  • தர்மபுரி - 28740
  • கரூர் - 24497
  • மயிலாடுதுறை - 23352
  • ராமநாதபுரம் - 20617
  • நாகப்பட்டினம் - 21282
  • சிவகங்கை - 20360
  • அரியலூர் - 16915
  • பெரம்பலூர் - 12099
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1031
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மழை பாதிப்பு; வேலூரில் மத்தியக் குழு ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.